பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 இலக்கண விதி: அடி, தொடை முதலானவை களை நோக்கி, ஒருமொழி முதல்,இடை,கடை என மூன்றிடத்தும் குறைந்து வருதலும் செய்யுள் விகாரமாகும். வலித்தன் மெலித்த னிட்டல் குறுக்கல் விரித்த ருெகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. (ந-நூற்பா 155.) ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே. (ந-நூற்பா 156.) 3. ணகர, னகர-யகர,ரகர, ழகர-லகர, ளகர ஈற்றுப்புணர்ச்சி (1) ணகர, னகர ஈற்றுப்புணர்ச்சி (வேற்றுமை) மண் + கலம்=மட் கலம் பொன் - கலம்=பொற்கலம் மண் + குடம் = மட்குடம் பொன் + குடம்=பொற்குடம் இவ்வாறு, வேற்றுமையிலே வல்லினம் வரின், னகர னகர ஈறுகள் முறையே டகரமாகவும், றகர மாகவும் திரியும். மண் + ஞாற்சி=மண் ஞாற்சி பொன் + ஞாற்சி= பொன்ஞாற்சி மண் + மாட்சி=மண் மாட்சி பொன்-மாட் சி= பொன்மாட்சி இவ்வாறு, வேற்றுமையிலே மெல்லினம் வரின், னகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண் + வன்மை=மண்வன்மை பொன் - வன்மை= பொன்வன்மை