பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பொருள் 1. அகத்திணை அகத்தினே, (அகம்+திணை) அகத்தே நிக ழும் ஒழுக்கம் பற்றியது. அகப்பொருள் எனவும் படும். அஃதாவது, ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும், தாம் துய்த்த இன்பத்தைப் புறத் தார்க்கு இத்தன்மையது என எடுத்துக் கூற இயலாததாய்த் தம் உள்ளத்தால் உய்த்துணரும் தன்மையதாகும். எனவே, அகத்தினை எனப் படடது. அகத்திணை வகை : குறிஞ்சித்தினை, முல்லைத்தினை, மருதத் தினே, நெய்தற்றிணை, பாலைத்திணை என அகத் திணை ஐந்து வகைப்படும். இவற்றுடன், கைக்கிளேத்தினை, பெருந்தினை என்ற இரண்டையும் கூட்டி ஏழு வகையாகவும் கூறுவர். ஐந்திணைக்குரிய பொருள் : மேற்சொல்லப்பட்ட ஐந்திணைகளும் முதற் பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள் என்ற மூன்று வகையால் வழங்கப்படும். அவற்றுள் முதற்பொருள்,கருப்பொருள் என்ற இரண்டையும் பற்றிக் காண்போம். 9