பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 முதற்பொருள் நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப் படும். 1. நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலம் ஐந்து வகைப்படும். 1. குறிஞ்சி-மலையும் மலைசார்ந்த இடமும், 2. முல்லை-காடும் காடுசார்ந்த இடமும். 3. மருதம்-வயலும் வயல்சார்ந்த இடமும். 4. நெய்தல்-கடலும் கடல்சார்ந்த இடமும். 5. பாலை-தனியாக நிலம் இல்லை. குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் தத்தமக் குரிய தன்மை திரிந்த பகுதி பாலை நிலம் எனப்படும். 2. பொழுது பெரும்பொழுது,சிறுபொழுது எனப் பொழுது இரண்டு வகைப்படும். பெரும்பொழுது இளவேனில், முதுவேனில், கார், கூதிர் (குளிர்) முன்பனி, பின்பணி எனப் பெரும்பொழுது ஆறு வகைப்படும். 1. சித்திரை, வைகாசி-இளவேனிற் காலம். 2. ஆனி, ஆடி-முதுவேனிற் காலம். 3. ஆவணி, புரட்டாசி-கார் காலம். 4. ஐப்பசி, கார்த்திகை-கூதிர் (குளிர்) காலம்.