பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 (கிலைமண்டில ஆசிரியப்பா) :வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி ைேரே சாரல் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.' இது கிலேமண்டில ஆசிரியப்பாவாகும். கிலே மண்டில ஆசிரியப்பாவில் எல்லா அடிகளும் கான்கு சீர்களைப்பெற்று வரும். மற்ற இரு ஆசிரி யப்பாக்களை வரும்வழிக் கண்டுகொள்க. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்: ஆசிரியப்பாவில் பெரும்பாலும் எல்லா அடி களும் நான்கு சீர்களேக் கொண்ட அளவடிகளாக வரும். ஈரசைச் சீர்களாகிய இயற்சீரும், சிறு பான்மை பிற சீரும் வரும். நேரொன்ருசிரியத் தளையும், கிரையொன்ருசிரியத் தளையும் பெற்று, அகவலோசை உடையதாக வரும். சிறுபான்மை பிறதளையும் விரவி வரும். இறுதிச்சீர் ஏகாரத் தால் முடியும். மூன்றடிச் சிறுமையும், பாடு வோன் ஆற்றலைப் பொருத்துப் பலவடிப் பெருமை யும் உடையதாக வரும். 3. அலகிடுதல் (சீர் பிரித்து, வாய்பாடு கூறி, தளை, எதுகை, மோனை எடுத்து எழுதுதல்) செய்யுளே அலகிடுதலாவது, முதலில் செய்யு ளில் அடிதோறும் உள்ள ஒவ்வொரு சீருக்கும்