பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



6

இலக்கண விதி: உ, ஊ, ஒ, ஓ, ஒள என்ற உயிரெழுத்துக்ககள் ஐந்தும், உதடுகளைக் குவித்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கும்.


உளை ஒஒ ஒள இதழ் குவிவே.

(ந-நூற்பா 78.)

4. மெய்யெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு
(க, ங், ச, ஞ, ட, ண இவற்றின் முயற்சிப் பிறப்பு)
மக்கள்  அரசாங்கம்  மிச்சம்
பிஞ்சு கட்டம் மண்

இச் சொற்களில் உள்ள க், ங், ச், ஞ், ட், ண் என்ற மெய்யெழுத்துக்களை ஒலித்துப் பாருங்கள். அவற்றுள்,

க், ங் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், அடிநாக்கு மேல்வாயின் அடியைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.

ச், ஞ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், நடுநாக்கு மேல்வாயின் நடுப்பகுதியைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.

ட், ண் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், நுனிநாக்கு மேல்வாயின் நுனிப் பகுதி யைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.

இலக்கண விதி: க், ங் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் அடிநாக்கு மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்தும் முயற்சியாலும், ச், ஞ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் நடுநாக்கு மேல்வாயின் நடுப்பகுதியைப் பொருந்தும்