பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í 49 இவ்வணி, பொதுப் பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் வலியுறுத்திப் பாடப்படும்பொழுது, முழுவதுஞ் சேறல், ஒருவழிச் சேறல் எனப் பல வகையாகப் பாடப்படும். 2. வேற்றுமையணி முதலில், ஒப்புடைய இரு பொருள்களை ஒரு பொருளாக வைத்து ஒப்புமை கூறி, பிறகு பிறி தொரு வகையில், கூற்றினுலாவது குறிப்பினு லாவது அவை தம்முள் வேற்றுமைப்படச் சொல்லு வது வேற்றுமையணி எனப்படும். "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனயது தன்னே ரிலாத தமிழ்.' 'உதயகிரியில் தோன்றி, உயர்ந்த மக்கள் தொழ விளங்கி, ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகின் புற இருளேப் போக்குவது, ஒளியும் அழகும் பொருந்திய ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரை உடைய சூரியவைான்; பொதியமலையில் தோன்றி, அறிவுடையோர் தொழ விளங்கி, ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களின் அகவிருளாகிய அறியாமையைப் போக்குவது, தனக்கு நிகரற்ற தமிழ் மொழியாகும்’ என்பது இப்பாடலின் பொரு ளாகும. இப்பாடலில், சூரியன், தமிழ் ஆகிய இரண் டும் மலேயில் தோன்றுவதாலும், உயர்ந்த மக்கள்