பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 4 எனவே, நீயும், உன் வீரரும் போர்ப் பயிற்சி அற். றவர்களாவிர்கள். ஆகவே, அஞ்சியுடன் போர் புரிந்தால் நீ தோற்று விடுவாய்' என அவன் ஆற். றலைப் பழித்துக் கூறுகின்றர். 'அஞ்சியின் படைக்கலங்களோ, பகைவரைக் குத்திக் குத்திக் கங்கும் நுனியும் முறிந்து, பழுது பார்ப்பதற்காகக் கொல்லன் உ2லக் களத்தில் உள்ளன என்று பழிப்பது போலக் கூறிக் குறிப் பாக அஞ்சியும், அவன் படை வீரரும் அடிக்கடி போர்செய்து பழக்கம் உடையவர்கள். எனவே அவன்,உன்னை எளிதாக வென்று விடுவான்’ என அஞ்சியின் ஆற்றலைப் புகழ்ந்து கூறுகின்றர். எனவே, இப்பாடலில் புகழ்வது போலப் பழித்தலும், பழிப்பதுபோலப் புகழ்தலும் ஆகிய இரண்டும் ஒருங்கே அமைந்துள்ளன. இது வஞ்சப் புகழ்ச்சியாகும். 6. சொற்பொருட் பின்வருநிலையணி ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பலவிடத்தும் வருமாயின், அது, சொற்பொருட் பின்வருங்லை அணி எனப் படும். அங்ங்னம் வரும்பொழுது, 1. முன்வந்த சொல்லே பின்னும் பல விடத்தும் வருமாயின், அது சொற்பின்வருகி2ல யணி எனப்படும்.