பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 E. அ. . எடுத்துக்காட்டாகத் தமிழ் முனிவர் திரு. வி. கலியாணசுந்தரனர், தம் இலங்கைச் செலவு குறித்து எழுதிய கட்டுரையில் ஒரு பகுதியை இங்கே காண்க. எனது இலங்கைச் செலவு பொழுது செவ்வனே புலர்ந்தது. எங்கள் பேறே பேறு ! வழிநெடுகப் பசுமை உமிழும் மலைகளின் செறி வும், சூழலும், கிரையும், அணியும் உள்ளத்தைக் கவர் கின்றன. முகிற்குழாங்கள் முண்டெழுந்து படிப்படியே அசைந்தும், ஆடியும், ஒடியும் மலை முகடுகளிற் சூழ்ந்து தவழ்ந்து பாகைபோல் பொலியுங் காட்சியும்-அம் மலைகளின் உடல் புலன காவாறு பசும்பட்டுப் போர்த் தாலெனப் பொழில்கள் துதைக்துள்ள அழகும்-புலன் க2ள ஒன்றச் செய்கின்றன. மலேயுச்சியினின்றும் தரைவரை கிரைகிரையாகச், சரிந்தும் செறிந்தும் ாகிற்கும் தெங்கின் பெருக்கும், அவ்வாறே தெங்கை விட்டுப் பிரியாது அணித்தே புடைசூழ்ந்து கிற்குங் கமுகின் உயர்வும், அவைகளுடன் நீக்கமின்றி வாழ்க் கைத் துணையெனச் சுற்றிச் சுற்றிப் பின்னிக்கிடக்குங் கான் பரந்த செடிகொடிகளின் ஈட்ட மும், வானுல கேறப் பச்சைப் படாம் விரித்த படிகளெனத் திகழ்கின் றனவோ என்று ஐயுறலாம். புகைவண்டி அப் பசுமை நிலத்தில் பாய்ந்தோடுவதை கோக்குழி, அது பச்சை மரகத மலையைக் கிழித்தோடும் அம்பெனத் தோன்று கிறது. பசுமைக்காட்சி யில்லாத இடனும் உண்டோ! கண்ணுக்கும் உளத்துக்கும் இனிமையூட்டும் பசுமை யின் பெற்றியை என்னென்றுரைப்பேன்! புகைவண்டியின் விரைவில், இடையிட்ை யோடுஞ் .சிற்றருவிகளின் தோற்றம், பசிய வானில் மின்னெளி