பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 காட்டாக : சிலப்பதிகாரக் கதையைக் கூறக் கூடிய உரைகட்ைப்பனுவல் கொடுக்கப்படுமானல், அதனைக் கொண்டு கீழ்க்கண்டவாறு கட்டுரைப் பொருள் திரட்டல் வேண்டும். முன் னுரை : தமிழ்க் காப்பியங்கள்-நெஞ்சை அள்ளும் காவியம். பொருள் : சிலப்பதிகாரம், மூன்று பேருண்மை களைக் காப்பியத்தின் மையமாகக் கொண்டது. தமிழர் யாவர்க்கும் அது மேற்கோள் நூலாகும். (அந்நூலி லிருந்து கட்டுரைக்குக் கீழ்க் கண்டவாறு குறிப்புக்கள் எடுத்துக் கொளல் வேண்டும்.) வாழ்த்துப்பகுதி-திருமணம்-ஆடல் மகளுடன் வாழ்ந்த வாழ்வு-கோவலன் வீடு திரும்பல்-தன் மனைவியை மதுரைக் கழைத்தல்-கவுந்தியடிகளின் துணை-ஆயர்குடியில் வரவேற்கப்படல்-கோவலன் சிலம்பு விற்கச் செல்லல்-கொலேக் களக் காட்சிட கண்ணகி உண்மையை உணர்தல்-தன் கனவன் கள்வனல்லன் என விளக்கிக் காட்டல்-அரசன் உயிர் விடுதல்-கண்ணகி சேரநாடு அடைதல்-செங்குட் டுவன் கல்லெடுத்துக் கோயில் அமைத்தல்-யாவ ராலும் கண்ணகி தொழப்படுதல்-முடிவுரை. இவ்வாறு, மேற்கோள் நூல்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதிப் பயிற்சி பெறவேண்டும். திருக் குறள், புறகானு று, கம்பராமாயணம் போன்ற மேற்கோள் நூல்கள் கொடுக்கப்பட்டால் அவற்றைப் பன்முறை படித்துக் குறிப்புக்களை அமைத்துக் கொண்டு கட்டுரை எழுதத் தொடங்க வேண்டும்.