பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 13. பொருள் வகையாலும், நடைவகை யாலும் சிறந்த கடிதங்கள் எழுதுதல். மாணுக்கர்கள் பொருள் வகையாலும், கடைவகை யாலும் சிறந்த கடிதங்களை எழுதிப் பழகுதல் வேண் டும். ஒரு விழா கடத்துவதற்குமுன் செய்ய வேண் டிய முன்னேற்பாடுகள் குறித்துச் செயலருக்கு எழுத லாம். தம் தம்பி தங்கையர்க்கு அறிவுரை புகன்று ஆக்க வழியில் ஈர்த்துச் செல்லக் கூடிய கடிதமாக அமையலாம். தம் பெற்றேர்க்குத் தம் நிலையை விளக்கி வரைகின்ற கடிதமாக விருக்கலாம். நாடா ளும் தலைவர்களுக்கு தம் வேண்டுகோள்களே நயம் பட எழுதி உணர்த்தலாம். தம் கண்பர்களுக்கு உள முருக்குகின்ற வகையில் கடிதம் எழுதித் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பலதுறை யிலும் கற் கடிதங்கள் எழுதிக் கடிதம் எழுதும் வன்மை கைவரப்பெறல் வேண்டும். கடிதம், தலைப்பு முன்னுரை, பொருள், முடிவுரை, முகவரி என்ற ஐந்து பகுதிகள் அடங் கியதாக இருத்தல் வேண்டும். கீழ்க்காணும் பொருள்கள் குறித்துக் கடிதங்கள் எழுதிப் பயிலுக. (1) பெற்றேர்க்குத் தன்னிலை குறித்துக் கடிதம் எழுதுதல்(2)கண்பனின் தேர்வு வெற்றிகண்டு மகிழ்ந்து கடிதம் எழுதுதல் (3) நீ பார்த்த விழாச் சிறப்புற கடக் தது குறித்து விழாத் தலைவருக்குக் கடிதம் எழுதுதல் (4) உன் தம்பி தங்கையர்க்கு அறிவுரை கூறுகின்ற முறையில் கடிதம் எழுதுதல் (5) நீ படித்துச் சுவைத்த