இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
- 9
- இச் சொற்களில் உள்ள ல், ள் என்ற இரண்டு
மெய்யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவற்றுள்,
- ல் என்ற மெய்யெழுத்து, மேல்வாய்ப் பல்
லின் அடியை நாக்கின் ஒரமானது தடித்துப்
பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும்.
- ள் என்ற மெய்யெழுத்து, மேல்வாயை
நாக்கின் ஒரமானது தடித்துத் தடவும் முயற்சி
யால் பிறப்பது தெரியவரும்.
- இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லின் அடியை
நாக்கின் ஒரமானது தடித்துப் பொருந்தும்
முயற்சியால், ல் என்ற மெய்யெழுத்தும், மேல்
வாயை நாக்கின் ஒரமானது தடித்துத் தடவும்
முயற்சியால், ள் என்ற மெய்யெழுத்தும்
பிறக்கும்.
- அண்பன் முதலு மண்ணமு முறையின்
- நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும்
- லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்.
- (ந-நூற்பா 84.)
- (வ, என்ற எழுத்தின் முயற்சிப் பிறப்பு)
தெவ்வர்
- இச் சொற்களில் உள் வ் என்ற மெய்
யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அது, மேல்
வாய்ப் பல்லைக் கீழுதடு சென்று பொருந்தும்
முயற்சியால் பிறப்பது தெரியவரும்.
- இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு
சென்று பொருந்தும் முயற்சியால், வ் என்ற
மெய்யெழுத்துப் பிறக்கும்.