பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 வரவேற்க வேண்டுமென்பது மரபாகும். ஆதலின் வருகைதந்த பெருமக்களைச் சிறப்பித்து, அவர்கள் செய்த செயல்களைப் பாராட்டி, வரவேற்புரை எழுத வேண்டும். சிறு கூட்டங்களாயின் தலைவரை, வர வேற்று உரை நிகழ்த்துவர். ஊருக்குப் புதிதாக வந்த அறிஞருக்கு, ஆட்சி புரிவோருக்கு வரவேற்புரை 6 (ԱՔ திப் படித்தலுண்டு. பேரறிஞர்கள், பெரும்புலவர்கள், அமைச்சர்கள், போன்றேர் தலைமை வகிக்கின்ற பொழுது அவர்களுக்கு வரவேற்புரை எழுதிப்படிப்பர். வரவேற்புரை எழுதுகின்றபொழுது வரவேற்கப்படு கின்றவரின் பண்பு கலன், அறிவு, உரு, கல்வி, பொறுப்பு, தொண்டு முதலியவற்றைக் குறிப்பிட்டு வரவேற்புரை எழுதுதல் வேண்டும். உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மா. முத்து சாமி பி. ஏ., பி. டி. அவர்கள் 16-9-267இல் காரைக் குடி க்கு வருகை தந்த பொழுது, அவருக்கு அளித்த வரவேற்பிதழ், கீழே கொடுக்கப் பெற் றுள்ளது. அதனே க் காட் டாகக் கொண்டு வரவேற்புரை எழுதிப் பழி கு.க. வரவேற்புரை குடிபுரந்தழுவும் கலங்கேள் அமைச்சே! பள்ளியாசிரியராகப் பணிபுரிந்து, பாராளுமன்றம் புகுந்த மாண்புமிக்க உள் ளாட் சித் துறை அமைச்சே! அல்லும் பகலும் ஒல்லும் வகை ஒவாது செல்லும் வாயெல்லாம் செவ்வினையாற்றும் செஞ்ஞாயிற்றின் ஒளிக் கதிரே! நூம்மைக் கள்ள மில் வெள்ளைச் சிந்தை வாழ்த்தொலி எழுப்ப, காலை முதல் கங்குல்தொடரக்