பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வண்ணம் கன்னித் தமிழில் பேசினை. நும்முட்ைய பேச்சால் மேடைத் தமிழ் வாழ்வு பெற்றது. இவ்வாறு நும்மால் மேடைத் தமிழோடு, உரை நடைத் தமிழும் வளர்க்கப்பெற்றது. நும்முடைய பேருழைப்பால் நூற்றுக்கணக்கான பனுவல்கள் தமி ழர்க்குப் பெருமுதலாகக் கிடைத்துள்ளன. தங்களிடம் கல்வி கற்ற காரணத்தால் நூற்றுக்கணக்கான மாண வர்கள் தமிழ் காத்துத் தாயகம் பேணி வருகின்றனர். ஆதலின் மொழி வாழவும்,காடு வளரவும் தாங்கள் இன்னும் பல்லாண்டு பேராசிரியப் பொறுப்பேற்றுப் பணிபுரிதல் வேண்டுமென எல்லாம் வல்ல இயற் கையை இறைஞ்சு கிறேன். மேல் மொழிந்த புகழுரையைக் கேட்ட, தமிழ்ப் பேராசிரியர் விடுத்த மறுமொழி. என் உழுவலன் புடைக் கெழுதகை கண்பர் அவர் கள், தமிழின் பாலுளதணியாக் காதலால், தமிழால் வாழும் என்னைப் பலபடப் பாராட்டிப் புனைந்துரைத் தார்கள். அவர்கள் புகழ்ந்த புகழுரைகளுக்கு கான் எட்டுனையும் தகுதியுடையவனல்லேன். அவர்கள் கூறுகின்ற பொழுது என் ல்ை மேடைத் தமிழ் வளர்ந்ததென் றர்கள். அவ்வாறெல்லாமில்லை. எனக்கு முன்பே திரு. வி. க., மறைமலையடிகள், இராமலிங்க அடிகள், காவலர், பாரதியார் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களால் மேடைத் தமிழ் வளர்க்கப் பட்டு வந்துள்ளது. அவர்களை அடியொற்றியே கான் சென்றுள்ளேன்.