பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 மேலும் அவர்கள், என்னல் உரைநடைத் தமிழ் வளர்ந்ததென் றர்கள். இவ்வாறு கூறுவது என் பாலுள பெருமதிப்பையும், அன்பையும்தான் புலப்படுத்து கிறது. எனக்குமுன் உரைநடைத் தந்தை, உரை நடை வேந்தரெலாம் தமிழில் பல நூல்கள் யாத்துத் தமிழ் மண்ணில் உலவ விட்டிருக்கிறர்கள். அவர்களைப் பின் பற்றியே யான் சென்றுள்ளேன். முன்னுேர் எவ்வழி சென்றுள்ளனரோ அவ்வழியிலே கான் சென்றுள் ளேன். நான் தமிழ்ப் பேராசிரியராக விருக்த காரணத் தால் என்னுடைய கடமையை முடிந்தவரை மன நிறை வுடன் செய்திருக்கிறேன் என்று கூறி, மேலும் எனக்கு வெள்ளிவிழா கடத்திச் சிறப்பித்த தமிழ் அறிஞர் கழகத்துக்கும் நன்றிகூறி அமர்கின்றேன்; வணக்கம். 23. நாடகக் காட்சி அமைத்தல் நீங்கள் பல நாடகங்களைப் பார்த்திருப்பீர்கள். அக் நாடகங்களின் காட்சிகளை நாடக வாசிரியர்கள் : வ் வாறு அமைத்துள்ளனரென உன்னிப்பார்த்தல் வேண் டும். நாடகக் காட்சிகளே அமைப்பதற்குமுன் கதையை கன்கு மனத்தில் கொண்டு, எவ்வெக் காடகமாந்தரை அக்காட்சிக்குக் கொணர்தல் வேண்டும், எவ்வெவ்வாறு உரையாடல்களே அமைத்தல் வேண்டுமென எண்ணிப் பிறகு எழுதுதல் வேண்டும். நாடகக் காட்சிகள் நன்கு அமைந்தால்தான் காடகம் சிறப்புறும். ஒவ்வொரு காட்சியிலும் காலம், இடம், அக்காட்சிக்குரிய மாந்தர் கள் பற்றிய விளக்கம் தெளிவாகவிருத்தல் வேண்டும். காட்டாக: பின்வரும் நாடகக் காட்சிகளைப் படித்து உணர்ந்து மனத்திற்கொண்டு, நாடகக் காட்சிகளே அமைத்துப் பழகுக.