பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 எ-டு: எழுவாய் செயப்படுபொருள் பயனிலை பொன்முடி அறம் செய்தான். இவை முறை மாறி வருதலும் உண்டு. எ-டு: திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். + இங்கே, செயப்படு பொருள் தொடக்கத்திலும், எழுவாய் இடையிலும், பயனிலை இறுதியிலும் கிற்றல் காண்க. இயற்றியவர் என்னும் வினையாலணையும் பெயர், திருவள்ளுவர் என்னும் பெயர்ப் பயனிலையைக் கொண்டு முடிந்தது. வாக்கியத்தில் எழுவாய் வெளிப்பட்டு கிற்றலே பெருவழக்கு. . எ-டு: நான் செல்வேன் நீ வருவாய் சிறுபான்மையாக எ ழு வா ய் வெளிப்படாது தொடர் அமைதலும் உண்டு. அதனைத் தோன்ற எழுவாய் என்பர். எ-டு: வந்தேன் (நான்-தோன்ற எழுவாய்) வந்தாய் (நீ - FF ) வாக்கியங்களில் வரும் பெயரெச்சங்கள் பெய - ருக்கு முன்னும், வினையெச்சங்கள் வினைக்கு முன்னும் வரும. எ-டு : ஒடிந்த வாள் (பெயரெச்சத் தொடர்.) நடந்து வந்தான் (வினையெச்சத் தொடர்)