பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2C6 செயப்படு பொருளின்றி வாக்கியம் அமைதல் உண்டு. சிறுபான்மையாக எழுவாய் இன்றியும் வாக்கியம் அமைதல் உண்டு. ஆல்ை, எவ்வகை யினும் பயனிலையின்றி வாக்கியம் நிரம்புதல் இல்லை. ஒரு கலவை வாக்கியத்தில், எழுவாய் அடை மொழிகள் எழுவாயைத் தழுவியும், செயப்படு பொருள் அடைமொழிகள் செயப்படுபொருளைத் தழுவி யும், பயனிலை அடைமொழிகள் பயனிலையைத் தழுவி o யும் வரும். எ-டு: "இந்தியப் பெருகிலத்தின் விடிவெள்ளி யென வந்த காந்தியடிகள், மாந்தருக்கு இன்றியமையாத விடுதலை உணர்வை இடையறது ஊட்டினர்.” இந்தியப் பெருகிலத்தின் விடிவெள்ளியென வந்த' என்ற பகுதி, எழுவாயாகிய காந்தியடிகள்' என்பதைத் தழுவியும், இன்றியமையாத’ என்பது விடுதலை உணர்வு என்னும் செயப்படுபொருளைத் தழுவியும், 'இடையருது’ என்பது, ஊட்டி ர்ை’ என்னும் பயனிலையைத் தழுவியும் பொருள் விளக்கம் on is தருகினறன. 8. ஒரே கருத்தைப் பல உருவ வாக்கியங்களில் வெளியிடுதல் முன்னர்ப் பலவகை வாக்கியங்க2ளப் பார்த்தோம். ஒரு வாக்கியத்தையே பலவகை வாக்கியங்களாக மாற்றி அமைத்தலும் கூடும். வாக்கிய மாற்றப் பயிற்சியை மேற்கொள்ளுதல், மொழிகலத் தேர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படுவதொன்றகும். கீழ் கவரும் வாக்கியத்தை உற்றுணர்க.