பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கொண்டு பிறக்கும். அதற்குரிய முயற்சி வாய் திறத்தல் மட்டுமே ஆகும். ஆய்தம் ஒழிந்த உயிர்மெய் முதலான மற்றைச் சார்பெழுத்துக் கள், தத்தம் முதல் எழுத்துக்களுக்குரிய பிறப் பிடம், முயற்சி ஆகியவற்றையே தாமும் கொண்டு பிறக்கும். ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய. (ந-நூற்பா 87.) பயிற்சி விளுக்கள் 1. பொதுவாகத் தமிழ் எழுத்துக்கள் எங்ங்னம் பிறக் :கின்றன ? 2. முதல் எழுத்துக்கள் எவை? அவை பிறக்கின்ற இடங்கள் எவை ? .ே அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஐ, ஒள-என்ற உயிரெழுத் துக்களின் முயற்சிப் பிறப்பைக் கூறுக. 4. க், ங், ச், ஞ், ட், ண் என்ற மெய்யெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பைக் கூறுக. 5. த், ந் என்ற மெய்யெழுத்துக்கள் எங்ங்னம் பிறக் கின்றன? 6. மேலுதடும், கீழுதடும் பொருந்தும் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்கள் எவை? 7. ர, ழ, ல, ள என்ற மெய்யெழுத்துக்கள் எங்ங்ணம் பிறக்கின்றன? 8. ற், ன் என்ற மெய்யெழுத்துக்கள் எங்ங்னம் பிறக் கின்றன ? 9. ஆய்த எழுத்திற்குரிய இடப் பிறப்பையும் முயற்சிப் பிறப்பையும் கூறுக. 10. உயிர்மெய் முதலான சார்பெழுத்துக்கள் எங் கனம் பிறக்கும் ?