பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 மணிபவள நடை : (மணிப்ரவாள கட்ை) மணியும் பவளமும் விரவத் தொடுத்த ஆரம் போல, வடசொல்லும் தென்மொழியும் விரவத் தொடுத்த கடை மணிபவள நடையாகும். “ஞாயிற்றுக்கிழமை அஸ்வதி கட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில், என் சிரேஷ்ட் குமாரன் விஜயனுக்குப் பிரம்மோபதேசம் செய்வதாய் நிச்ச யிக்கப்பட்டு, மேற்படி முகூர்த்தம் எனது கிருகத்தில் நடக்கிறபடியால், தாங்கள் பந்து மித்திரர்களுடன் வந்திருந்து குழந்தையை ஆசீர்வதிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இங்ஙனம், செளம்யநாராயணன். தனித் தமிழ் நடை: இலக்கண அமைப்பினின்றும் வழுவாது, வேற்றுச் சொல் விரவாது, தனித் தமிழ்ச் சொல்லே புணர்த்து எழுதப்படுவது தனித் தமிழ் கடையாகும். 'மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடிையிலே கினேவுகளான கலங்கற் பெரு நீர் பெருகிச் செல்லும் போது, உலக இயற்கை என்னும் மலைக் குகைகளிலே அரித்தெடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்று கள், இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடி நிலத்தே சிதர்ந்து மின்னிக் கிடப்ப, கல்லிசைப் புல வன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற் சிதர்களை எல்லாம் ஒன்றப்ப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப கெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் தருவதே பாட்டு என்று அறிதல் வேண்டும்.” -மறைமலையடிகள்.