பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 என்ற சொல்லை நீக்கி, உவமையாகிய தாமரையின் தன்மையைப் பொருளாகிய முகத்தின் மீது ஏற்றி: 'முகத்தாமரை” என மொழிதல் வேண்டும். இவ்வாறு வரும் இத்தொடரை விரித்தால், "ஆகிய' என்னும் பண்புருபு மறைந்து நிற்பது புலகுைம். இவ்வாறு மாற்றும்பொழுது உவமேயம் முன்னும், உவமானம் பின்னுமாக அமைதல் வேண்டும். உருவகத்தை உவமையாக மாற்றல் : "தமிழ்த் தேன்’ இ..து உருவகம். இதனை உவமைத் தொட ராக மாற்றப் பின்னுள்ள உவமையாகிய தேனே' முன்னர்க்கொண்டு வந்தும், முன்னுள்ள உவமேய மாகிய 'தமிழை” இறுதியில் வைத்தும், இடையில் 'போன்ற” என்ற உவம உருபை விரித்தும் எழுதின் “தேன் போன்ற (இனிய) தமிழ்” என உவமைத் தொட ராக மாறும். கீழே தரப்பட்டுள்ள உவமைகளையும், உருவகங் களையும் பிரித்தெடுத்து மாற்றி எழுதிப் பயில் க. பவளவாய், முகமதி, பாதமலர், பால்போலும் இன் சொல். 12. வல்லெழுத்து மிகும் இடங்களும் மிகா இடங்களும் (விரிவாக) தமிழ் மொழியில் புணர்ச்சியிலக்கணம் பொருட் செறிவுமிக்கது. ஆதலின் அதனை கன்கு விளங்கிக் கற்று எழுதப் புகுதல் மானக்கர் கட்னம். எனவே ஈண்டு வல்லெழுத்து மிகும் இடங்களும், மிகா இடங் களும் தொகுத்துக் கொடுக் கப்பட்டுள்ளன. மானக் கர் கற்றுப் பயன் பெறுவாராக.