பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 (தான்) அவன் தான் சென்ருன். அவள் தான் சென்ருள். அதுதான் சென்றது. மேற்கண்ட தொடர்களில் உள்ள தான் என் பது பொதுப்பெயர்ச் சொல்லாகும். அவன்தான் சென்ருன்’, ‘அவள்தான் சென்ருள்' என்ற தொடர் களில், தான்' என்பது உயர்தினை ஒருமையில் வந்துள்ளது. அதுதான் சென்றது' என்ற தொட ரில், தான்' என்பது அ.றனே ஒருமையில் வக் துள்ளது. எனவே, தான்’ என்பது இங்ாவனம் இருதினேக்கும் பொது வாக வந்தமையால் பொதுப்பெயர் எனப்படும். (தாம்) அவர் தாம் சென்றனர். அவைதாம் சென்றன. மேற்கண்ட தொடர்களில் உள்ள தாம்’ என் பது பொதுப்பெயர்ச் சொல்லாகும். அவர்தாம் சென்றனர்” என்ற தொடரில், தாம்’ என்பது உயர் தினேப் பன்மையில் வந்துள்ளது. அவைதாம் சென்றன’ என்ற தொடரில், தாம்’ என்பது அ.நறினைப் பன்மையில் வந்துள்ளது. எனவே, "தாம்’ என்பது இங்ாவனம் இருதினேக்கும் பொது வாக வந்தமையால் பொதுப் பெயர் எனப்படும். (எல்லாம்) அவர் எல்லாம் சென்றனர். அவை எல்லாம் சென்றன.