பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இலக்கண விதி: முதற்பெயராகிய நான்கு பெய. ரும், சினேப்பெயராகிய நான்கு பெயரும், சினை முதற் பெயராகிய நான்கு பெயரும், முறைப் பெயராகிய இரண்டு பெயரும், தன்மைப் பெய ராகிய நான்கு பெயரும், முன்னிலைப் பெயராகிய ஐந்து பெயரும், எல்லாம், தாம், தான் என்னும் முன்று பெயரும், இவைபோல்வன பிறவும் இரு திணைக்கும் பொதுப் பெயர்களாகும். முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்குஞ் சினைமுதற் பெயரொரு நான்கு முறையிரண்டுந் தன்மை நான்கு முன்னிலை யைந்தும் எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர். (ந-நூற்பா 282.) 3. ஆகுபெயர்-அன்மொழித்தொகை வேறுபாடு (ஆகுபெயர்) ஒரு பொருளுக்கு இயற்கையாய் அமைக் துள்ள பெயர், அதனோடு தொடர்புடைய வேறு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர்' எ னப்படும். அவ் வாசபெர், பொருளாகுபெயர், இடவாகு பெயர், காலவா,பெயர், சினையாகுபெயர், குண வாகுபெயர், தொழிலாகுபெயர் முதலியனவாகப் பலவகைப்படும்.

  • தாமரை போலும் முகம்’-இங்கே தாமரை என்ற முதற்பொருளின் பெயர், அதைேடு தொடர் புடைய சினையாகிய மலருக்கு ஆகி வந்துள்ளது.