பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வினையெச்சம் இரண்டிற்கும் பொதுவினயாக வந்துள்ளது. இவை போல்வன பிறவும் பொதுவினைகளாக வரும். 5. உருபு மயக்கம் மன்னனை மாலையிட்டாள் 'இந் நகர்க்கே வாழ்கின்ருேம்' "மன்னனை மாலையிட்டாள்’ என்ற தொடர், "மன்னனுக்கு மாலையிட்டாள் என்று இருக்க வேண்டும். இங்கே, கு என்ற நான்காம் வேற் றுமை உருபு இருக்க வேண்டிய இடத்தில், ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மயங்கி வந்துள்ளது. "இந் நகர்க்கே வாழ்கின்றேம் என்ற தொடர், "இந் நகரின்கண் வாழ்கின்ருேம் என்று இருக்க வேண்டும். இங்கே, கண் என்ற ஏழாம் வேற். றுமை உருபு இருக்க வேண்டிய இடத்தில், கு என்ற நான்காம் வேற்றுமை உருபு மயங்கி வந் துள்ளது. - இங்ாவனம், ஒரு வேற்றுமை உருபு இருக்க வேண்டிய இடத்தில், வேருெரு வேற்றுமை உருபு மயங்கி வந்தாலும், பொருள் மாறுபடாமல், எந்த வேற்றுமை உருபு இருக்க வேண்டுமோ, அந்த வேற்றுமை உருபின் பொருளையே தருவது