பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45
உண்பான் (உண்+ப்+ஆன்) என்பதில்

'ப்' இடைநிலை எதிர்காலம் காட்டுகிறது.

செல்வான் (செல்+வ்+ஆன்) என்பதில் 'வ்'

இடைநிலை எதிர்காலம் காட்டுகிறது.

'ப்-வ்’ என்ற இவ்விடைநிலைகள் ஐம்பால்

மூவிடங்களிலும் எதிர்காலங் காட்டும்.

நடப்பான்-நடப்பாள்-நடப்பார்

நடப்பது-நடப்பன

இவற்றில், 'ப்' என்ற எதிர்கால இடைநிலை

படர்க்கை ஐம்பாலில் வந்துள்ளது.

வருவான்-வருவாள்-வருவார்

வருவது- வருவன

இவற்றில், 'வ்' என்ற எதிர்கால இடைநிலை

படர்க்கை ஐம்பாலில் வந்துள்ளது.

நடப்பேன்-வருவேன்
இவற்றில், 'ப்-வ்' என்ற எதிர்கால இடைநிலை

கள் தன்மை ஒருமையில் வந்துள்ளன.

நடப்போம்-வருவோம்
இவற்றில், ப்-வ்’ என்ற எதிர்கால இடைநிலை

கள் தன்மைப் பன்மையில் வந்துள்ளன.

நடப்பாய்-வருவாய்
இவற்றில், ப்-வ்’ என்ற எதிர்கால இடைநிலை

கள் முன்னிலை ஒருமையில் வந்துள்ளன.

நடப்பீர்-வருவீர்