பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 51

இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும்,செய்யும் என்னும் வாய்பாட்டு 'உம்' என்னும் முற்று விகுதி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும், எதிர்மறை ஆகார விகுதி முன்று காலங்களையும் உணர்த்தும்

றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவுந்
தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு
கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல்
வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தஞ்
செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும்
(ந-நூற்பா 145.)

7. சினைவினை - முதல்வினை

இராமன் விழுந்தான்.
இராமன் கால் முறிந்தது.
இராமன் கால் முறிந்து விழுந்தது.
இராமன் கால் முறிந்து விழுந்தான்.


'இராமன் விழுந்தான்'என்ற தொடரில்,

விழுந்தவன் யார்? இராமன்.எனவே, இராமன் என்பது முதற்பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகும்.விழுந்தான் என்பது அம் முதற் பொருளின் தொழிலைக் குறிக்கும் வினைச் சொல் லாகும். இங்கு விழுந்தான் என்பதிலுள்ள 'விழுதல்'முதற்பொருளின் தொழிலைக் குறிக்கும் வினையாதலால்,அது முதல்வினை எனப்படும்.