பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



52

'இராமன் கால் முறிந்தது’ என்ற தொடரில்,

முறிந்தது எது? கால். எனவே, கால் என்பது சினைப்பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். முறிந்தது என்பது அச் சினைப் பொருளின் தொழி லைக் குறிக்கும் வினைச் சொல்லாகும். இங்கு, முறிந்தது என்பதிலுள்ள ’முறிதல்’ சினைப்பொரு ளின் தொழிலைக்குறிக்கும் வினையாதலால், அது சினைவினை எனப்படும்.

’இராமன் கால் முறிந்து விழுந்தது’ என்ற

தொடரில்,முறிந்து என்ற வினை எச்சத்தில் உள்ள ’முறிதல்’ சினையாகிய காலினுடைய தொழிலாகும். எனவே, அது சினைவினை எனப்படும். இங்கு, விழுந்தது என்பது வினைமுற்றாகும். அவ் வினை முற்றில் உள்ள ’விழுதல்' என்ற தொழிலும், சினை யாகிய காலினுடைய தொழிலேயாகும். எனவே, அதுவும் சினைவினேயே யாகும்.


மேலும் இத்தொடரில்,’முறிந்து’ என்ற சினை

யின் வினைஎச்சம், ’விழுந்தது’ என்ற சினையின் வினை முற்றைக் கொண்டு முடிந்திருக்கிறது. எனவே, இத்தொடரில் சினைவினை, சினைவினை யைக் கொண்டே முடிந்துள்ளமை தெரியவரும்.


'இராமன் கால் முறிந்து விழுந்தான் என்ற

தொடரில், முறிந்து என்ற வினையெச்சத்தில் உள்ள ’முறிதல்’ சினையாகிய காலினுடைய தொழி லாகும். அது, சினைவினை எனப்படும். இங்கு, விழுந்தான் என்பது வினைமுற்றாகும். அவ் வினை