பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

முற்றில் உள்ள 'விழுதல்' முதல் வினையின் தொழி லாகும். அது, முதல்வினை எனப்படும்.


மேலும் இத்தொடரில்,'முறிந்து' என்ற சினை யின் வினை எச்சம்,விழுந்தான் என்ற முதற்பொரு ளின் வினைமுற்றைக் கொண்டு முடிந்திருக்கிறது. எனவே, இத்தொடரில் சினைவினை, முதல்வினை யைக் கொண்டு முடிந்துள்ளமை தெரியவரும்.


இலக்கண விதி:முதலில் நான்கும் ஈற்றில்

மூன்றும் என்று சொல்லப்பட்ட வினை எச்சங்கள், சினைவினையாயின், சினைவினையைக் கொண்டு முடிதலேயன்றி, முதல்வினையையும் கொண்டு முடியும். (சினை-உறுப்பு)

8. பொதுவினை}}
(வேறு-உண்டு-இல்லை-யார்-எவன்)
அவன் வேறு-அவன் உண்டு-அவன் இல்லை
அவள் வேறு-அவள் உண்டு-அவள் இல்லை
அவர் வேறு-அவர் உண்டு-அவர் இல்லை
அது வேறு-அது உண்டு-அது இல்லை
அவை வேறு-அவை உண்டு-அவை இல்லை


மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் உள்ள ’வேறு-உண்டு-இல்லை’ என்னும் வினைமுற்றுக் கள்,தொழிலையும், காலத்தையும் வெளிப்படை யாக உணர்த்தாமையால் குறிப்பு வினைமுற்றுக் களாகும். அவை, இங்கு இருதினை ஐம்பாலுக்கும் பொதுவாகப் படர்க்கையில் வந்துள்ளன.