பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஆக்கப்பட்டன அன்றி, மா மரத்திற்குரிய இயல் போடும், தென்னை மரத்திற்குரிய இயல்போடும் தோன்றிய பொருள்களுக்கெல்லாம், தொன்று தொட்டு மரபுபற்றி வருதலின் இடுகுறி மரபு தொடர்ந்த பெயர்களாகும். இடையே ஒருவரால் ஆக்கப்பட்டன அன்றி, குறுக்கே முதுகெலும்பை உடைய காரணத்தால் விலங்கு என்றும், பறக்கின்ற காரணத்தால் பறவை என்றும் பெயர் பெற்ற விலங்கு-பறவை' என்ற காரணப் பெயர்கள், குறுக்கே முது கெலும்பை உடைய எல்லாவற்றிற்கும், பறக் கின்ற எல்லாவற்றிற்கும் தொன்றுதொட்டு மரபு பற்றி வருதலின், காரணக்குறி மரபு தொடர்ந்த பெயர்களாகும். 'மான வேல் முட்டைக்கு மாருய தெவ்வர்போம் கான வேல் முட்டைக்கும் காடு.' என்ற, பொய்யாமொழிப் புலவர் பாடலில் வேட்டுக்குமரன் தன்பெயர் முட்டை என்று கூறியது இடுகுறி ஆக்கம் ஆகும். பொன்னன் என்பது காரணக்குறி ஆக்கம் ஆகும். இங்கு, முட்டை என்ற இடுகுறிப் பெயரும், பொன்னன் என்ற காரணப்பெயரும், மரபுபோலத் தொன்று தொட்டு வருதலின்றி இடையே ஒருவ ரால் ஆக்கப்பட்டு அப் பொருள்களுக்குப் பெயர்க உளாக வருவதால், அவை முறையே இடுகுறி ஆக்க