பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 "நீ, நீர், எல்லிர், நீயிர், நீவிர் இவை ஐந்தும் முன்னிலை இடத்திற்குரிய ஒருமை-பன்மைப் பெயர்களாகும். தன்மைப் பெயரும், முன்னிலைப் பெயரும் ஒழிந்த, அவன், அவள், அவர், அது, அவை என் பனவற்றை உள்ளிட்ட பிற பெயர்கள் எல்லாம் படர்க்கை இடத்திற்குரியன. மூவிடப் பொதுப்பெயர் யாம் எல்லாம் - தன்மையிடம் நீர் எல்லாம் - முன்னிலையிடம் அவர் எல்லாம் - அவை எல்லாம் - படர்க்கையிடம் ‘எல்லாம் என்பது தன்மை - முன்னிலை படர்க்கை ஆகிய முன்று இடத்திற்கும் பொதுப் பெயராக வர்துள்ளது. இதுவரை பார்த்தவற்றிலிருந்து பெயர்கள், இருதின ஐம்பால் மூவிடங்களில், ஒன்றனே ஏற். பனவும், பலவற்றினை ஏற்பனவுமாய் வந்தமை தெரியவரும். இலக்கண விதி: இடுகுறியும் காரணக்குறிய மாகிய பெயர்கள், மரபினேயும் ஆக்கப்பாட்டினை யும் தொடர்ந்துவர,வினையாலனையும் காரணக்குறி மட்டும் காலங்க்ாட்ட, மற்றவை காலங்காட்டா வாய், எட்டு வேற்றுமைகளும் சார்தற்கு இடமாகி, இருதினை ஐம்பால் மூவிடத்து ஒன்றனை ஏற்பன வம், பலவற்றினை ஏற்பனவுமாய் வருவன பெயர்ச் சொற்களாகும்.