பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இலக்கண விதி: பொருள், இடம், காலம், சினே, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களின் அடியாகத் தோன்றிச் செய்பவன் முதலாகிய ஆறனுள், செய்பவனுகிய கருத்தாவை மட்டும் வெளிப்படையாக விளக்குவது குறிப்பு வினை யாகும். பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னறனுள் வினைமுதன் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே. (ந-நூற்பா 321.) (3) வினைச்சொற்களின் வகைகள் (தெரிநிலை வினைமுற்று) கண்ணகி வந்தாள் இங்கு, வந்தாள்’ என்ற வினைச்சொல், பகுதி யால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும், விகுதியால் திணைபாலையும் வெளிப்படையாகக் காட்டுகிறது. எனவே, வந்தாள் என்பது தெரிநிலை வினைமுற்றகும். (தெரிநிலைப் பெயரெச்சம்) படித்த பெண் இங்கே, படித்த’ என்ற வினைச்சொல், பகுதி யால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும், வெளிப்படையாக உணர்த்துகிறது. திணைபால் உணர்த்தும் விகுதி இன்மையால் படித்த என்ற சொல் முற்றுப் பெறவில்லை. எனவே, படித்த’ என்பது எச்சவினையாகும். அது, பெண் என்ற பெயர்ச் சொல்லைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது.