பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைேன்மணியம் 109 செம் கண் போத்தும் - சிவந்த கண்களையுடைய செம்போத் தும், கம்புள் கோழியும் - ச ம் ப ங் கோழியும், கனகுரல் நாரையும் - உரத்த குரலையுடைய நாரையும், சினம் மிகு காடையும் - தம் மினத்தையே சினந்து பார்க் கின்ற காடையும், பொய்யாப் புள்ளும் - பொய் யாப்புள் என்ற பறவையும், உள்ளான் குருகும் - மீன்கொத் திப் பறவையும், என்று இவை பலவும் - என் றிவை போன்ற பல பறவை களும், எண் இல குழிஇ - அளவில்லா தனவாகக் கூடியிருந்து, சிரம் சிறிது அசைத்தும் - தலை யைச் சிறிது ஆட்டியும், சிறகை அடித்தும் - சிறகுகளை அடித்தும், அந்தி அங்காடி சந்தம் காட்டி - மாலைவேளையில் கூடும் கடைத் தெருவின் தோற்றத்தையும் இரைச்சலையும் போல, தம் தம் - தங்கள் தங்களுடைய, குழுஉ குரல்தமை - கூட் ட ங் களுக்குரிய குரல்களை, விரித்து எழுப்பும் - பரவும்படி எழுப்புகின்ற பேர் ஒலி ஒன்றுமே - பேரோசை மட டும், ஆர்தரும் - நிறையும் . கருதது வயல்களைக் கம்பளமாகக் கொண்டு, தாமரை மொட்டுக்களைப் புகையில்லாத விளக்குக்களாகக் கொண்டு முத்துக்களையும் சோவி களையும் பன்னமாகக் கொண்டு, நண்டுகள் அவற்றை எண்ணிப் பார்க்கவும், அன்னம் கொக்கு செம்போத்து, சம்பங்கோழி, நாரை, காடை, பொய்யாப்புள் , மீன்கொத்தி இவைபோன்ற பற வைகளும் கூடியிருந்து தலையசைத்தும் சிறகடிகதும் மாலே வேளை யிற் கூடும் கடைத்தெரு என்றெண்ணும்படியாக ஒலி யெழுப்பின. விளக்கம் இப்பகுதியில் கடைத்தெருவாக உருவஞ் செய்திருப்பது படித்தின்புறத்தக்கது குவளைமலர்க் கொடிகளும் பல நிற உப்பளங்களும் பொருந்திய நிலப்பகுதி பல்வகை நிறங்களைக்கொண்ட இரத்தினக் கம்பளம் போல விளங்குகிறது. எல்லாக் கட்ைத்தெருக்களிலும் உள்ள விளக்குக்கள் புகை யுடையனவே. இங்கேவுள்ள விளக்கோ புகையில்லாதது. தாமரை மொட்டு வடிவம் பழங்கால விளக்கை நினைவூட்டும். சந்தம்-ஒலி, அழகு என்னும் இருபொருளேயும் இங்கே குறிக்கிறது . # . . . . . குழுஉக்குரல்-கூட்டமாகிய குரல். வணிகர்கள்_தங்களுக்குள் வெளிப்படையாகப் பேசார் : குழு உக்குறியால் பேசுவதியல்பு. அவ்வியல்பையும் குழுஉக்குரல் என்னுஞ் சொல்லால் குறிப்பிடும் நயம் அறிந்து இன்புறற்பாலது.