பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பல்சுவை கருதது பாம்பு நச்சுடையது, சிவன் முடியில் பொருந்தும், காற்றை உணவாகக் கொள்ளும், அதனுல் உடல் பருக்கும், கலை துாக்கி ஆடும், கோபக் குணமுடையது. எலுமிச்சம் பழம் பெரியவர்கள் கையில் கொடுக்கப்படும், பித்தர்கள் தலையில் தேய்க்கப்படும், நறுக்கப்படும், உப்பு துரவப்படும் ; அதன் சாறு எரிச்சலைக் கொடுக்கும். விளக்கம் இப்பாட்டின் முதல் இரண்டடியும் இரட்டுற மொழிதல். பாம் புக்கு பெரிய-விடம் எனவும் உப்பும்--மேல்+ஆடும் எனவும் பிரித்து, எலுமிச்சம் பழத்துக்கு, பெரிய+ இடம் எனவும் உப்பு:+ மேலர்டும் எனவும் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். இவ் வாறு பிரித்து இருபொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை எனப்படும். பித்தர் முடியேறும், அரியுண்ணும், எரிகுணமாம் என்பன அவ்வாறே செம்மொழியாகவே நின்று இருபொருள் தரு வதால் செம்மொழிச்சிலேடை எனப்படும். பெரியவர்கள்ைக் காணச் செல்பவர்கள் எலுமிச்சம் பழங் கொண்டு செல்வது மரபு. பித்துப் பிடித்தவர்களுக்கு எலுமிச்சம் பழம் தேய்ப்பது இயல்பு. இலக்கணம் தேம் பொழியும்-தேன்-பொழியும். 2. பாணனும் விறலியும் இம்பர்வான் என்று தொடங்கும் பாடல் அந்தகக் கவி வீரராகவு முதலியாரால் பாடப்பட்டது. இவர் இரா மன் என்னும் வள்ளலைப் ப்ர்டி அவன்பால் பெற்றுவந்த irனையைப்பற்றி விறலியிடம் கூறு வதாக அமைந்துள்ளது இந்தப் பாடல். ஆசிரியரைப்பற்றி பெயர் : அந்தகக்கவி வீரராகவ முதலியார். ஊர் பெர்ன்விளைந்தகளத்துார் (செங்கற்பட்டு மாவட்டம்) o தந்தை , வடுகநாத முதவியார். காலம்: 17-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி. +: இவர் பிறவியிலேயே குருடரானமையாலும், கவி எழுதும் வல்லமை பெற்றிருந்தமையாலும் அந்தகக்கவி என்று அழைக்கப் பட்டார். குருடர்ாயிருந்தமையால் இவருடைய தந்தை எழுத் துக்களை இவருடைய முதுகில் எழுதி எழுதிக் கற்பித்தார். தந்தை ார் பல நூல்களைப் படிக்க கேட்டுக் கேட்டுப் புலமை பெற்ருர் என்று கூறுவர். இப்பாடல் உரையாடலாகவும், நகைச்சுவை நிரம்பியதாகவும் அம்ைந்துள்ளது. யானை எனப் பொருள்படும் பல சொறகளே அழ காகக் கையாண்டிருக்கிருர்,