பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பல்சுவை == பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் நக்கீர தேவ நாயனர். இவர் வேறு. சங்கப் புலவரான நக்கீரர் வேறு. நக்கீர ருக்குப் பன்னுாறு ஆண்டுகட்குப் பின் தோன்றியவர் இந்த நக்கீர தேவ நாயனர் இவர் பாடிய வேறு நூல்கள் : கைலைப்ாதி காளத்தி பாதி அந்தாசி, திருவலஞ்சுழி மும் மணிக்கோவை, கோபம் பிரசாதம் முதலியன. இந்நூல் எழுபது பாடல்களையுடையதேனும் சில பாடல்கள் சிதைந்தொழிந்தன. வண்டும் மந்தியும் வழகு இதழ் காந்தள் மேல் பழகி எழுந்து எழுந்து - அடிக் மெல்லிய இதழ்களையுடைய கடி எழுந்தெழுந்து, காந்தள் மலர்க்கொத்தின் கை நெரிக்கும் - கைகளை நெரிப் மேல். பதற்கு இடமான, வண்டு இருப்ப - (தேனைப்பருக) ஈங்கோய் - ஈங்கோய் மலையா வண்டுகள் வந்து அமித', னது, ஒண்தி முழுகியது என்று - அவை திங்கள் கொழுந்து எழுந்த . ஒளி பொருந்திய நெருப்பிலே பிறைச் சந்திரன் பொருந்திய, மூழ்சி விட்டனவோ என்று, செம்சடையான் - சிவந்த சடை முது மந்தி அஞ்சி - கிழக் குரங் முடியையுடையவனுகிய சிவ கொன்று பயந்து, ( இரக்கங் பெருமானுடைய, கொண்டு) குன்று - திருமலையாகும். கருத்து செங்காந்தட் கொத்துக்குள் அமர்ந்த வண்டைக் கண்ட கிழக் குரங்கு, அது நெருப்பினுள் மூழ்கியதோ என்று இரங்கி அடிக்க்டி கையை நெரிப்பதற்கு இடமான ஈங்கோய் மலை பிறைசூடிய பெரு ட்ாைனுடைய மலையாகும். விளக்கம் மலையில் செங்காந்தள் குப்பென்று பூத்திருக்கிறது. பூத்து மலர்ந்த அத்தோற்றம் பார்வைக்கு நெருப்புப் போல் இருக்கிறது. மந்திக்கு அப்படியே தோன்றுகிறது. முது மந்தியல்லவா அது. பார்வை மங்கியிருக்கத்தானே செய்யும். நெருப்புக்கு அஞ்சும் இயல்புடையது குரங்கு. ஆகவே சிறிது எட்டியிருந்தது. அப் பொழுது தேனைப் பருக வண்டு ஓடி வந்து விழுந்தது. ஐயையோ பாவம் வண்டு நெருப்புக்குள் வீழ்கிறதே ! என் செய்வது ? என்று இரங்கிக் கையை நெரிக்கிறது. ஒரு முறை யன்று : பல முறை நெரிக்கிறது. பெண் குரங்கில்லவ ? பெண்மைக்கு இயல்பாகிய இரக்கம் அதனிடம் இருக்கத்தானே செய்யும். மந்தி-பெண்குரங்கு. கை நெரித்தல் பெண்களுக் குரிய செயல். திங்கள் கொழுந்து-பிறைச்சந்திரன்,