பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னிசைப்பாக்கள் 133 விளக்கம் மெய்ப்பொருளைத் தெரிந்தவர்களே முக்காலமும் உணர முடி யும் என்பதை அறிவுறுத்த மெய்ப் பொருளைத் தெரிந்து முக் காலமும் உணர்ந்து' என்ருர். முக்கால நிகழ்ச்சிகளையும் உணர வல்லார் துறவிகளே யாது வின் முக்காலமுமுணர்ந்து துறந்தவர்" என்ருர். "துறந்தவர் இதயாசனத் திருந்தவனே இப்பகுதி மலர்மிசை ஏகினுன்’ என்னும் குறளையும் நினைப்பவர் மனம் கோவிலாக் கொண்டவன்’ என்ற தேவாரப் பகுதியையும் நினைவூட்டுகிறது. - இறைவன் இன்பதுன்பங்களுக்குக் காரணமான வேண்டுதல் வேண்டாமை இல்லாதவளுதலின் அவனை இன்பதுன்பமற்றவன்" எனருா. இன்பமும் துன்பமும் பிறவிதோறும் தொடர்ந்து வருவதாலும் இன்பத்தைத் தொடர்ந்து துன்பமும் துன்பத்தை த் தொடர்ந்து இன்பமும் வருவதாலும் தொடர் இன்ப துன்பம் எனப் பட்டது. * அவனை மறந்தவர்களுக்குச் சுவர்க்கமும் இல்லை ; மதியும் இல்லை என்பார் பதியும் மறந்து மதியும் மறந்தவரே " என்று கூறுகின்ருர், இலக்கணம் இலா-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் இதயாசனம்-உருவகம் இன்ப துன்பம், பிறப்பிறப்பு-இரண்டும் உம்மைத் தொகை திதிரி மறந்தவர்-வினையாலணையும் பெயர் கவர்க்கப்பதி-இருபெயரொட்டுப் பண்புத் தொகை பதியையும் மறந்து-உம்மை எதிரது தழுவிய எச்சவும்மை, பின்னே வரும் மதிமறத்தலைத் தழுவி வந்தமையால் எதிரது தழுவியதாயிற்று. மறந்தவரே-ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. 6. தடையில்.............................சொல்வதே இப்பாடல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களால் பாடப் பட்டதாகும். - ஆசிரியரைப்பற்றி : பெயர் : மாயூரம் வேகநாயகம் பிள்ளை ஊர் : திருச்சியை அடுத்த குளத்துரர் மதம் : கத்தோலிக்கக் கிறித்தவர். ஆயினும் பொதுநோக் குடையவர். - - காலம் : பிறப்பு 11-10-1826. மறைவு : 21-7-1889,