பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் வினவிடை-பழமொழி 153 - -m ஈ பழமொழி 1. குலவித்தை கல்லாமற் பாகம் படும். எவ்வாறு? வழக்குரைக்க வந்த முதியோர் இருவர், சோழன் கரிகாற் பெருவளத்தான் இளம் பருவத்தகை இருத்தலைக் கண்டு, இவன் தம் வழக்கை ஆய்ந்து காணும் அறிவுரம் பெற்றிரான் என்று கருதிச் செல்ல, அதனையறிந்த சோழன் முதுமை வேடம் புனைந்து வந்து அவர்கட்கு நீதி வழங்கினன். இதல்ை இவன் இளைஞன யினும், அவன் குல வித்தையாகிய நீதி வழங்கல் அவனுக்கு இயல் பாகவே அமைந்து கிடந்தமை தெரிகிறது. 2. உரை முடிவு காணுன் என்று தொடங்கும் பாடல் என்ன அணி? அவ்வணியின் இலக்கணம் யாது? இச்செய்யுள் வேற்றுப் பொருள் வைப்பணி, இவ்வணியின் இலக்கணமாவது: பொதுப் பொருளால் சிறப்புப் பொருளையும், இறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் உறுதிப்படுத்திக் கூறுவது. அஃதாவது வேருெரு பொருளை வைத்துத் தான் சொல் லக்கருதும் பொருளை உறுதிப்படுத்துவது. 3. பொல்லாத சொல்லும் பேதையின் இயல்பு யாது ? இவனுக்குக் கூறப்பட்ட உவமை யாது ? பிறரைப் பொல்லாங்கு சொல்லிக் கரந்து வாழும் பேதை தான் சொல்லும் சொல்லாலே தன்னைத் துன்பத்தின்கண் அகப் படுத்துவான். இவனுக்குக் கூறப்பட்ட உவமை. மணலுக்குள் மறைந்து வாழும் தவளை, தன் குரலை வெளிப்படுத்திக் காட்டித் தன்னைத் தின்னும் பிராணிகட்கு அகப்படுதல். 4. பொல்லாத சொல்லி' என்று தொடங்கும் செய்யுள் என்ன அணி? அவ்வணியின் இலக்கணம் யாது? இச்செய்யுள் எடுத்துக்காட் டுவமையணியாகும். அதனிலக்க னம் உவமேயத்தை விளக்க ஒர் உவமானத்தை எடுத்துக் காட்டு வதாகும். உவமானமும் உவமேயமும் தனித்தனிச் சொற்ருெடர் களாக வந்து இடையே அதுபோல என்ற சொல் மறைந்தேனும் வெளிப்பட்டேனும் வரும். 5. நண்பர் எப்பொழுது பலராவர்? எப்பொழுது ஒருவ ரும் இலரா வர்? ஒருவர் முட்டுப்பாடில்லாமல் செல்வம் உடையராக இருக்கும் பொழுது, வீட்டில் உள்ள உணவை உண்ணும் நண்பர் மிகப் பல ராவர். வறும்ை வந்து பொருளிழந்தபொழுது நண்பர் ஒருவரும் இலராவர். 6. நாடறிந்த செல்வருடைய இயல்பு யாது? இதை விளக்க வந்த உவமை யாது? இப்பாடல் என்ன அணி?