பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - பொதுச் செய்யுள் வினவிடை | நாடறிந்து செல்வர் வறுமையால் வாடிலுைம் தம்மைப் பிறர் தாழ்த்தச் சம்மதியார், தாழ்த்துவதற்குப் பிறரும் அஞ்சுவ்ர். இஃது அவருடைய இயல்பு. இதை விளக்க வந்த உவமை: புலி தளர்ந்து படுத்த படுக்கை யாய்க் கிடந்தாலும் நாய் அதனை நெருங்காது என்பதாம். இச்செய்யுள் எடுத்துக்காட்டு உவமையணி. - H இலக்கணக் குறிப்பு வரைக. விச்சை-வித்தை என்பதன் மரூஉ. நல்லாய்-மகடூஉ முன்னிலை. பொல்லாத சொல்லி-வினையாலணையும் பெயர். கட்டலர்தார் மார்ப-ஆடுஉ முன்னிலை. அட்டிற்று-ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று. பலர் ஆயிரவர் ஆப - பலர்பால் வினைமுற்று வட்குப-பலர் பால் வினைமுற்று. 8. உறுப்பிலக்கணம் தருக. உவப்ப-உவ+ப்-ப்-அ; உவ-பகுதி, ப்-சத்தி, ப்-எதிர் கால இடைநிலை. அ-வினையெச்ச விகுதி, அட்டிற்று-அடு-ல் +து: அடு-ல் அட்டில் என்ருகி அனைத் தும் சேர்ந்து பகுதியாக நின்று து என்னும் குறிப்பு வினை முற்று விகுதி பெற்று முடிந்தது. ஆப-ஆ--ப; ஆ-பகுதி, ப-பலர்பால் விகுதி. வட்குப-வட்கு-ப; வட்கு - பகுதி, ப - பலர்பால் வினை முற்று விகுதி. - - 11. தொடர்கிலச் செய்யுள் அ. சிலப்பதிகாரம் 1. புகார் நகரத்துக் கொடியிடையார் இரவுக் கோலம் பூண்டதை எழுதுக. கதிரவன் மறைந்த மாலைப் பொழுதில் கொடியிடையார் அகன்ற வீடுகளில் எல்லாம் அழகிய விளக்கின ஏற்றி வைத்து, முறுக்கவிழ்ந்த முல்லை மலர்களையும் நெல்லையும் கலந்து துரவி வழி பட்டுத் தமக்கேற்ற ിഷ്ണു உடுத்தும் புனைந்தும் இராப் பொழுதிற் கேற்றவாறு ஒப்பி ன செய்து கொண்டார்கள். 2. பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாள் யார்? ஏன் பாடுகிடந்தாள்? பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தவள் மாலதி என் னும் பார்ப்பனி யாவாள்.