பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் விவிைடை-சிலப்பதிகாரம் 155 அவள் பாடுகிடக்கக் காரணம் : அவள் ஒருநாள் தன் மாற்ரு ளின் குழந்தைக்குப் பாலைச் சங்கினல் ஊட்டும்பொழுது பால் விக்கிக் குழந்தை இறந்து விட்டது. அதுகண்டு மாலதி கலங்கி, “மாற்ருளும் கணவனும் நான் வேண்டுமென்றே கொன்று விட்ட தாக என் மேல் வீண் பழி சுமத்துவார்களே! எவ்வளவு எடுத் துரைப்பினும் உண்மையை உணர மாட்டார்களே! நான் என் செய்வேன்?’ என்று அக்குழந்தையை எடுத்துக் கொண்டு பாசண் டச் சாத்தனிடம் சென்று பாடு கிடந்தாள். 3. மாலதி இறந்த குழநதையை எடுத்துக்கொண்டு GT 5)? வெக் கோவில்களுக்குச் சென்ருள்? மாலதி இறந்த குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு, கற் பக தரு நிற்கும் கோவில், ஐராவதம் என்னும் வெள்ளானே நிற்கும் கோவில், பல தேவர் கோவில், சூரியன் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில், வச்சிரப்படை நிற்கும் கோவில், சாதவாகனன் கோவில், அருகன் கோவில், சந்திரன் கோவில் என்னும் இவ்வளவு கோவில்களுக்குஞ் சென்று முறையிட்டாள். 4. பாடு கிடந்த பார்ப்பனிக்குப் பேய்மகளால் நேர்ந்த துயர் யாது? இடு காட்டில் பினங்களைத் தின்று திரியும் இடாகினி என்னும் பேய் மகள் அழகிய ஒரு பெண் வடிவங் கொண்டு தோன்றி, குற்ற மற்ற பெண்ணே! தவம் செய்யாதவர்களுக்குத் தேவர் வரம் கொடார். இது பொய்யன்று; உண்மையேயாகும். அப்பினத்தை என் கையிற் கொடு பார்க்கலாம் என்று சொல்வி மாலதியின் கையிலிருந்த அக்குழந்தையின் பிணத்தைப் பறித்து விழுங்கி விட்டாள். 5. வரங்கிடந்த மாலதிக்குச் சாத்தன் எவ்வாறு அருள் புரிந்தான்? இடாகினிப் பேய் குழந்தையைப் பறித்து விழுங்கினவுடன் இடியேறுண்ட மயில் அகவுதல் போல மாலதி ஏங்கி அழச் சாத்தன் தோன்றி தாயே! நீ அழாதே; நீ வீட்டிற்குச் செல்; செல்லும் வழி யில் ஒரு சோலையில் உயிருடன் கிடக்கும் அக்குழந்தையை நீ காண் பாய்’ என்று கூறி, அத்தெய்வமே குழந்தை வடிவு கொண்டு கிடக்க, அம்மாலதி மகிழ்ந்து குழந்தையை வாரியெடுத்துச் சென்று குழந்தையின் தாய் கையிற் கொடுத்தாள். இவ்வண்ணம் சாத்தன் மாலதிக்கு அருள் புரிந்தான். 6. குழந்தையாக வந்த சாத்தன் வரலாற்றைச் சுருக்கி ST(ipogji“. o குழந்தையாக வந்த சாத்தன் வளர்ந்து நல்லாசானை அடுத்துக் கல்வி கேள்விகளில் நன்கு தேர்ச்சி பெற்று, தாய்தந்தையர் இறந்த பின்பு அவர்க்குச் செய்ய வேண்டிய கடன் முடித்துத் தாயத்தாரு