பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75f; பொதுச் செய்யுள் விணுவிடை டன் வழக்காடி வென்று வாழும் நாளில் தேவந்தி என்பவளே மணந்து சில காலம் அவளுட்னிருந்து இல்லறம் நடத்திப் பின் பொரு நாளில் அவளுக்குத் தன் தெய்வ வடிவைக் காட்டி நீ எமது கோட்டத்திற்கு வருவாயாக’ என்று கூறி மறைந்தான். 7. தேவந்தி கண்ணகியை எவ்வாறு வாழ்த்தினுள்? கண்ணகியின் தோழியாகிய தேவந்தி, கண்ணகிக்குக் கணவன் பிரிந்த தல்ை உண்டாகிய துன்பமொன்று உளது என்று நினைந்து வருந்தி, கோவிலை அடைந்து அறுகு, பூளைப்பூ, நெல் முதலியவற். றைத் துரவி வழிபட்டு வந்து கண்ணகியை நோக்கி, நீ பிரிந்த கண வனே மீண்டும் பெறுவாயாக’ என்று வாழ்த்தினுள். 8. வாழ்த்திய தேவந்திக்குக் கண்ணகி உரைத்த களுத் திறத்தை வரைக. தோழி! உன் வாழ்த்தால் என் கணவனைப் பெறுவேனயினும் தான் கண்ட கனவால் என் மனம் ஐயுறுகின்றது. அக்கனவு யாதெ னில், தானும் என் கணவனும் ஒரு பெரு நகருள் நுழைந்தோம். அந்நகரிலே அவ்வூர் மக்கள் ஏலர்த்தோர் பழிச் சொல்லை இடுதேள் இடுமாறு போல என் மேற் போட்டனர். அப் பழி மொழியால் கோவலனுக்கு ஒரு தீங்குண்டாயிற்று என்று பிறர் சொல்லக் கேட்டு, அவ்வூர் அரசன் முன்பு சென்று நான் வழக்குரைத்தேன். அதல்ை அவ்வரசனுக்கும் ஊர்க்கும் தீங்கொன்றும் உண்டாயிற்று. அது தீக்கனவாக இருத்தலால் உன்னிடம் அதனைக் கூறேன். பின் னர்த் தீக்குற்றம் உற்ற என்னுடன் பொருந்திய கணவனுடன் நான் பெற்ற பேற்றைக் கூறக் கேட்டால் உனக்குச் சிரிப்பை உண் டாக்கும்! என்று தேவந்திப்ால் கண்ணகி தான் கண்ட கனத் திறத்தை உர்ைத்தாள். | 9. கண்ணகி மீண்டும் தன் கணவனைப் பெறத் தேவந்தி கூறிய வழி யாது? அதற்குக் கண்ணகி தந்த மறு மொழி யாது? "கண்ணகி! நீ உன் கணவனுல் வெறுக்கப்பட்டாயல்லை; முற் பிறப்பில் கணவன் பொருட்டுச் செய்ய வேண்டிய ஒரு நோன்பைச் செய்யாது விட்டன. அத்ளுல் உண்டாகிய தீங்கு ஒழிவதாக, காவிரி கடலுடன் கலக்குமிடத்தில் சோமகுண்டம் சூரியகுண்டம் என்னும் ப்ெயரையுடைய இரு :ொய்கைள் உள. அவற்றில் மூழ்கி, மன்ம்தன் கோவிலை யடைந்து அ4னை வணங்குவோர் இவ்வுலகில் மகளிர் தம் கணவருடன் பிரியாதிருந்து இன்பம் நுகர்வர். மறுமை யிலும் போக பூமியிற் பிறந்து கணவரோடு இன்பம் துகர்வர். ஆதலால் நாமும் அவற்றில் ஒருநாள் நீராடுவோம்! என்று தேவந்தி கண்ணகிக்குக் கூறினுள். அதற்குக் கண்ணகி, "அங்ங்னம் துறை மூழ்குதலும் தெய்வந் தொழுதலும் எங்கட்கு இயல்பன்று; பெருமையுமன்று’ என மறு மொழி கூறினுள்.