பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பொதுச் செய்யுள் வினவிடை செல்வம் நான் பெற்ற செல்வமல்லவா ? இதனினும் நன்மை தருஞ் செயல் வேறென்ன உளது ? இக்கட்டளையைத் தலைமேற் கொண்டு இன்றே காட்டுக்குச் செல்கின்றேன். தங்களிடம் விடை யும் பெற்றுக் கொள்கிறேன் என்று இராமன் கைகேயியிடம் கூறினன். 7. கோசலைமுன் இராமன் எவ்வாறு சென்ருன் ? இருபுறமும் வீசுகின்ற வெண்சாமரம் இல்லாமலும் வெண் கொற்றக் குடையும் இல்லாமலும் துன்பந் தரும் விதிமுன்னே செல்லத் தருமம் பின்னே இரங்கிச் செல்ல, முடிசூடி வருவான் என்று மகிழ்ந்து எதிர் நோக்கிக் கொண்டிருந்த கோசலையின் முன் தனியணுகி இராமன் சென்ருன். 8. வணங்கிய இராமனை நோக்கிக் கோசலை கூறியன யாவை ? இராமன் முடி சூடவில்லே , மஞ்சன நீராடவில்லை : யாது காரணம் என்று ஐயுற்ற கோசலை தன்னுடைய கால்களில் விழுந்து வணங்கிய இராமனே நோக்கி மனங் குழைந்து வாழ்த் தி, ‘அர்சன் உனக்கு முடிசூட்ட நினைந்தது என்னவாயிற்று ? நீ முசூடிடுவதற்கு ஏதாவது இடையூறு விளைந்ததா ?’ என்று வினவினுள். 9. நெடுமுடிபுனைதற்கு இடையூறுண்டோ ? எ ன் து வினவிய கோசலைக்கு இராமன் கூறிய மறுமொழி யாது ? நெடுமுடி புனைதற்கு இடையூறுண்டோ என்று வினவிய கோசலையைக் கைகுவித்து வணங்கி நின்று, உன் அன்புக்குரிய 'மகனும் என் தம்பியும் ஆகிய பரதன் முடி சூடுகின்ருன் என்று மறுமொழி கூறினன். 10. பரதன் முடிசூடுகின்ருன் என்ற இராமனுக்குக் கோசலே கூறியன யாவை ? பரதன் முடி சூடுகின்ருன் என்று கூறிய இராமனே நோக்கி மூத்தவனிருக்க இளையவன் முடி சூடுதல் முறைமையன்று என்ப தொன்றுண்டு; அதைத் தவிர வேறு குறையேயில்லை, பரதன் நிறைந்த நற்பண்புகள் உடையவன்; உன்னேவிட மிகவும் நல்லவன்: ஒரு குறையும் இல்லாதவன்' என்று கோசலை கூறினுள். மேலும் "மகனே! ம ன் ன வ ன் ஏவலே மறுத்துரையாமல் இருப்பதுவே உனக்கு அறமாகும். உன் தம்பிக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு நீ அவனுடன் ஒன்றுபட்டுப் பல ஊழி வாழ்வாயாக’ என்று வாழ்த் தினுள். ஆ