பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுள் விவிைடை-புறநானூறு 169 வேளையிற் கூடும் கடைத்தெரு என்றெண்ணும்படியாக ஒலியெழுப் பின என்று வருணிக்கப்படுகிறது. 3. 4 1. இலக்கணக் குறிப்புத் தருக. ஒம்புபு துளைச்சியர்-செப்பு என்னும் வாய்பாட்டு வினே யெச்சம் புலர்மீன் கவர-வினைத்தொகை. வால்வளை சூலுளைந்து-பண்புத்தொகை, ஒதிமக்குடம்பை-ஆரும் வேற்றுமைத் தொகை. என்று உன்னுடி-செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கரும்பு அடுசாலை-வினைத்தொகை. களிமீன் கோட்பறை-உரிச்சொற்ருெடர். விளிகேட்டு உறங்கா-எதிர்மறைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று. இராப்பகல்-உம்மைத்தொகை. துகிர்க்கால் அன்னம்-உவமைத்தொகை. கனகுரல் நாரையும்-வினைத்தொகை. குழுஉக்குரல்-இன்னிசையளபெடை. பிரித்தெழுதுக. கரும்படு சாலை-கரும்பு-அடுசாலை. மேய்ந்தகல்-மேய்ந்து-அகல். சேற்றிடை-சேறு-இடை. கோட் பறை-கொள்-பறை, நாணிறம்-நான்கு-நிறம் ; நால்-நிறம். கனகுரணுரை-கனகுரல்-நாரை. பேரொலி-பெருமை-ஒலி. 1W பல்சுவை அ. 1. புறநானூறு கீழ்வரும் திணை, துறைகளை விளக்குக. பாடாண்டிணை, பரிசிற்றுறை, பாடாண்டினேயாவது பாடப்படும் ஆண் மகனுடைய ஒழுக லாற்றைப் புகழ்ந்து பாடுவது. அஃதாவது அவனுடைய கொடை, வீரம் புகழ் முதலியனவற்றைப் புகழ்ந்து பாடுவது. பாடு-ஆண் திணை. - பரிசிற்றுறையாவது வள்ளல் முன்னே பரிசிலர் தாம் கருதிய பேறு இஃதெனச் சொல்லுதல்.