பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 2 பொதுச் செய்யுள் விவிைடை -- 2, பரிசில் பெற்றுவந்த பெருஞ் சித்திரஞர் தம் மனை விக்குக் கூறியன யாவை ? என் மனைக்கு உரியவளே! வள்ளல் குமணன் வாரி வழங்கிய செல்வத்தை உன்னை விரும்பும் மகளிர்க்கும், உன்னல் விரும்பப் படும் மகளிர்க்கும், கற்பிற் சிறந்த நின் உறவினர் முதலானவர்கட் கும், நம் சுற்றத்தின் பசிதீரக் குறியெதிர்ப்பை நல்கியவர்கட்கும், விர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று கருதாமல், என்ன iம் கேள்ாம்ல், நாளைக்கு நாம் நன்கு வாழ்வோம் என்று சேமித்து வைக்காமல் நீயும் எல்லோர்க்கும் கொடுப்பாயாக என்று பெருஞ் சித்திரனர் தம் மனைவிக்குக் கூறினர். 3. இலக்கணக் குறிப்பு வரைக. நின்னயந்து-இரண்டாம் வேற்றுமைத் தொகை, பசிதீர யாழ நின்-முன்னிலை அசை. வல்லாங்கு வாழ்தும்-எதிர்காலத் தன்மைப்பன்மை வினை முற்று. நீயும் கொடு-எதிரது தழுவிய எச்சவும்மை. மனை கிழவோய்-விளிப் பெயர். நல்கிய வளன்-மொழியிறுதிப்போலி. 4. உறுப்பிலக்கண ந் தருக வாழ்தும்-வாழ்-தும். வாழ்-பகுதி, தும்-த ன் ைம ப் பன்மை வினைமுற்று விகுதி. கிழவன்-கிழமை-அன். கிழமை-பகுதி, அன்-விகுதி. | 2. சடையப்ப வள்ளல்கொடைச் சிறப்பு. 1. பரராச சிங்கன் சடையப்பரின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து பாடக் காரணம் என்ன ? ஒரு சமயம் கண்டிநாடு பஞ்சத்தால் வாடியது. அப்பொழுது அங்குச் சென்றிருந்த புலவர் ஒருவர் சடையப்பரின் கொடைத் திறத்தைப் புகழ்ந்து கூறி, அவர்பால் உதவிபெற முயல்க என்ற னர். அவர் சொற்படியே கண்டி நாட்டரசன் பரராச சிங்கன், வள்ளலை வேண்டிச் செய்தியனுப்பினன். ஈயும் இதயம் படைத்த வள்ளல் பல மரக்கலங்களில் சோழநாட்டு நெல்லை அனுப்பினர். நெல்லைப் பெற்றுப் பஞ்சம் தீர்ந்த பரராசன் நன்றி தெரிவிக்கும் முறையில் வர்யாரப் புகழ்ந்து இப்பாடலைப் பாடி அனுப்பின்ை.