பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுச் செய்யுன் வினவிடை-தமிழும் தமிழரும் 177 _ - ஊ. தமிழும் தமிழரும் 1. தமிழ் 1. தமிழுக்கும் கதிரோனுக்கும் உள்ள பொதுத் தன்மை கள் யாவை ? இப்பாடலில் அமைந்துள்ள அணி யாது ? தமிழ் ( ஓங்கல் இடைவந்து ) பொதிய மலையில் தோன்றி, ( உயர்ந்தோர் தொழ விளங்கி ) சான்ருேராற் புகழப்பட்டு, (ஞாலத்து இருள் அகற்றும் ) உலகத்தாரின் மன இருளை அகற்று கிறது. கதிரவன் (ஓங்கல் இடை வந்து) உதயகிரியில் தோன்றி, ( உயர்ந்தோர் தொழ விளங்கி ) உயர்ந்த மக்களால் வணங்கப் பட்டு, (ஞாலத்து இருள் அகற்றும் ) உலகத்து இருளைப் போக் கும. இப்பாடல் வேற்றுமை யணியாகும். 2. தமிழர்கள் தமிழ் மொழியைப் பொறுத்த வரையில் எவ் வாறிருக்கின்றர்கள் ? அவர்கட்குப் பாரதியார் கூறும் அறிவுரை யாது? - பல மொழிகளுக்குள்ளே தமிழைப் போல இனிய மொழி எங்குமே கண்டதில்லை, அத்தகைய மொழியைப் ப்ேளுமல், பாம்ர ராய், விலங்குகளாய், உலகம் இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட் டுப் பெயரளவில் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு வாழ்த்து வருகின்ருர்கள் தமிழர்கள். இவ்வாறு வாழ்வது நல்ல செய்ன் குமோ ? இனியேனும் தேனினும் இனிய தமிழின் ஒலி உலகமெல் லாம் பரவும் வகை செய்ய வேண்டு மென்று பாரதியார் அறி வுரை கூறுகின்ருர். தமிழ்ப்புலவர் 3. பாரதியார் சிறப்பித்துக் கூறும் புலவர்கள் யார் யார் 2 அவர்களை எவ்வாறு சிறப்பிக்கின் ருர் ? யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போலவும், திருவள்ளுவ ரைப் போலவும் இளங்கோவைப் போலவும் பூமியில் எங்குமே பிறந்ததில்லை. இது வெறும் புகழ்ச்சியன்று. உண்மையே யாகும் என்று பாரதியார் சிறப்பித்துக் கூறுகின்ருர். மு.-13