பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IS2 பொது உரைநடை விவிைடை 7. தமிழ் மொழியின் பேராற்றலையும் அதன் தாழ்நிலையை யும வரைக. பரந்த நோக்கங் கொண்டு சிறந்து விளங்கும் நம் தமிழ் மொழி யானது பிற மொழியின் சேர்க்கையால் விளையும் தீமைகளை ஒழித்து, நன்மைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு, அம் மொழிகளி லிருந்து வரும் கருத்துக்களையும் சொற்களையும் தன்னியல்பாக்கும் தன்விப் பேராற்றல் வாய்ந்ததாயிருக்கிறது. எந்தக் கலையாயினும் அதனை எடுத்துரைக்க வல்ல சொல் வளம் நிரம்பப் பெற்றது. ஆனல் தன்பால் தஞ்சமென வந்தோர்க்குத் தஞ்சமளித்து, நாளட்ைவில் தன் ஆட்சிப் பரப்பையும் செல்வாக்கையும் குறைத் துக் கொண்டது. பல் மொழிகள் பிரிந்து போனதாலும், புல முறை கடல் கோள் நிகழ்ந்தமையாலும்-தமிழ் வழங்கிய பெரிய நிலப் பரப்பு இன்று பதினுெரு கோட்டங்கள் கொண்ட சிறிய பரப்பாகி நிற்கின்றது. தன் சிேப்களாகிய தமிழ் மக்களும் தன்னைப் பேணுது பிறரையே பேணித் திரியும் பேதமை கண்டு ஏங்கி நிற்கிறது. தன் அன்ப் பேணும் ஆசிரியர்களும் மாணவர்களும் தாழ்ச்சி உறுவது கண்டு உள்ம் நைந்து உருகுகின்றது. முன்னுள் போல் இந்நாளும் தனியரசோச்ச வழி வகைகளை எதிர் நோக்கி நிற்கின்றது. 8. தாய் மொழிப் பயிற்சி புறக்கணிக்கப் பட்டு ஆங்கில மொழிப் பயிற்சியே போற்றப்பட்டு வரக் காரணம் என்ன ? ஆங்கில மொழியின் நெருக்கலிலுைம் அயல் மொழிகளின் கலப்ப்ாலும் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்பவரும் இலர்; கற்பிப்பவரும் இவர்; ஆங்கிலம் கற்றவர்க்கே உயர்ந்த வேலை களும், மிக்க வருவாயும், நன்மதிப்பும் கிடைத்து வந்தகாரனத் தால் பெற்ருேரும் மாணவரும் தாய் மொழித் தேர்ச்சியில் ஊக்கம் செலுத்துவதில்லை. அதற்கேற்பப் பள்ளிகளிலும் தாய் மொழிப் பயிற்சி புறக்கணிக்கப்பட்டு, ஆங்கில மொழிப் பயிற்சி போற்றப் படடது. 9. நுண்ணிய எண்ணங்களும் தெளிவான கருத்துக்களும் தோற்றுவதற்கு அடிப்படையான ேந க் கங்கள் யாவை ? (அ) ஒரு பொருளைப் பற்றி எளிய முறையில் தெளிவாகப் பேசவும், (ஆ) ஒரு பொருளைப் பற்றித் தெளிவான முறையில் ஒருவர் பேசுவதைக் கேட்கவும், கேட்டுப் பொருளுணரவும், (இ) ஒரு பொருளைப் பற்றித் தெளிவான முறையிற் படிக்க வும், படித்துப் பொருளுணரவும், (ஈ) ஒரு பொருளைப் பற்றித் தெளிவான எளிய முறையில் எழுதவுமான ஆற்றலை உண்டு பண்ணுவதாகும்.