பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{o}} பொது உாைநடை விவிைடை 5. மனேயியலும் கல்வியும் ஒன்றேயாகும் என்பதை விளக்குக. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமான குடும்ப வாழ்க்கையின் குறிக்கோள்கள்ை அமைத்துத் தருவதும், ஆன்மீக வாழ்க்கையைத் தருவதும், குழந்தைகளை நன்கு வளர்த்து ஆளாக் குவதும், மாருத இன்பத்தையும் நற்குணங்களையும் அளிப்பதும் வீடும் குடும்பமுமாகும். தனி மனிதனுடைய வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் இன்றியமையாத கூறுபாடுகளைக் கொண்ட குடும்பத்தைச் சீர்படுத்தி நடத்தும் வழிகளைக் கற்பிப்பது மனையி யல். கல்வியின் நோக்கங்களில் முக்கியமான சமூக உணர்ச்சி, ஒழுக்கம், மனநிறைவு, சுகம், தொழில் திறமை, ஒய்வு நேரத்தை வன்ம்படப் பயன்படுத்தல், ஒழுங்கான குடும்ப வாழ்க்கை ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டதே மனையியல். ஆகவே இவற் றைக் கற்பிப்பதால் கல்வியும் மனையியலும் ஒன்றே யாகும். 6. மனையியல், கல்விக்கு உயிர்நாடி போல விளங்குவது எவ்வாறு ? மனையியலானது வாழ்க்கைக்குக் குறிக்கோளைத் தந்து, அக் குறிக்கோளைத் தெளிவாக்கி, அதனுடைய வழியையும் காட்டி, மனித உள்ளத்தைப் பக்குவப் படுத்திக் குடும்பத்தை மலர வைக்கி றது ; அதன் மூலமாகச் சமூகத்தை வனப்புறுத்துகிறது. அதனல் அத்து எக்காலத்திலும், எந்நாட்டினருக்கும், ஆண்,பெண், இளைஞர் முதியோர் ஆகிய அனைவர்க்கும் பயன்படுகின்ற செல்வமாகி மக்கள் நலத்தையே முதலில் வைப்பதால் மனையியலானது கல்விக்கு உயிர் நாடி போல விளங்குகிறது. o 7. மனையியல் எவ்வெத் துறைகளை அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது ? மனேயியலானது நமக்கு நாடோறும் தேவையான உணவு, உடை, வீடு, பணம், உடல் வளர்ச்சி, உடல் நலம், குழந்தை வளர்ப்பு, நோயில் பாது காப்பு, ஒப்பனை, சமூகக் கடமைகள் ஆகிய பல துறைகளைக் கொண்டது. மேலும் இசை, வரலாறு, கலையழகு, பண்பாடு, இறை வழிபாடு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டது. வீட்டலங்காரத்தையும் கற்பிப்பது. தென் புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ருங்கு ஐம்புலத் தாறு ஓம்பல்தலை’ என்ற கடமைகளை வேதமாகக் கொண்டது. 8. மனையியல் கல்வித் திட்டங்களில் முக்கியமானவை எவை ? மனையியல் கல்வித் திட்டங்களில் முக்கியமானவை . பொரு வியல்கள், உயிர் உடற் கூற்றியல்கள், பொருளாதாரம் போன், சமூக இயல்கள், உளவியல், கலைகட்டிடவியல் முதலிய விஞ்ஞானத் கலைக ளாம். -