பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேயியல் /87 தெரிந்து கொள்ள வேண்டியவை யாவை ? 9. உணவுத் துறையில் விஞ்ஞான முறைப்படி நாம் ? உணவின் இயல்பு, இரசாயனக் கூறுகள், தேவைகள், உடல் வளர்ச்சிக்கேறற உணவுகள், நோயில் என்னென்ன தேவை என்பன வற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் உணவுக் குறை யால் விளையும் நோய்களைத் தவிர்க்கும் வகை, கிடைக்கும் உண வைச் சிறந்த வகையில் பயன்படுத்தும் முறை, உணவினுல் உடலில் ஏற்படும் இரசாயன மாறுதல்கள் என்பனவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். 10. உடையைப் பற்றிக் கல்லூரிகளில் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை எவை ? உடையின் இயல்பு, இரசாயனக் கூறுகள், குணங்கள், நெசவு, நிறத்தின் வன்மை, சுருங்குவது நீண்டுபோவது முதலியன, பட்டு, கம்பளி, செயற்கைப்பட்டு, பருத்தி, லினன் என்பவற்ருல் ஆகிய துணிகளின் சிறப்புக்களும் குறைகளும், உடையை அமைப்பது, தைப்பது, அலங்காரத்தையல், வயதிற்கேற்ப உடைகளை அமைப் பது, தட்ப வெட்ப நிலைக்கேற்ப உடுத்துவது, உடைகளைப் பேணு வது, தூய்மையாகத் துவைப்பது, உலர்த்துவது, பெட்டி போடு வது, கம்பளி பட்டு முதலியவற்றைப் பூச்சிகள் அரிக்காவண்ணம் பது, கிழிந்தவற்றைப் புதுப்பிப்பது முதலியவை கல்லூரிகளில் காப் ந்துகொள்ள வேண்டியவையாம். 11. வீட்டமைப்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டி யவை யாவை ? வீட்டமைப்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை : சுகாதாரம், வெளிச்சம், நடமாட்ட வசதி, அழகு, தொழில் துணுக்கம் முதலியன நன்கு அமையும்படி வீடு கட்டுவது, முன்பே கட்டப்பட்ட வீடாக இருக்குமானல் வசதிக்கேற்ப ஒழுங்குசெய்து கொள்வது, வீடு, பணம் பண்பாடு இவற்றிற்கேற்ற மேசை, நாற்காலி முதலியன வாங்குவது, அழகுக்கும் உணவுத் தேவைக் கும் ஏற்பத் தோட்டம் போடுவது என்பனவாம். 12. வீட்டுப் பொருளாதாரத்தில் நாம் கவனிக்கவேண்டி யவை எவை ? வரவுக்குத் தக்க செலவு செய்வது, எல்லாச் செல்வங்கனேயும் பெருக்குவது, தேவைகளின் அவசரத்திற்கேற்பச் செலவு செய்வது, எதிர் காலத்திற்குப் பொருள் சேமித்து வைப்பது, குடும்பத்தைச் சாமர்த்தியமாக நடத்திப் பல வகைச் சுருக்கு முறைகளைக் கண்டு பிடித்துக் கையாண்டு இன்பம் பெறுவது என்னும் இவை வீட்டுப் பொருளாதாரத்தில் நாம் கைக் கொள்ள வேண்டியவையாகும்.