பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பொது உரைநடை விளுவிடை 5. தமிழ் இசைக் கருவிகள் 1. தமிழர் இசையுணர்ச்சியுடையராயிருந்தனர் என்பதற் குச் சான்று தருக. தமிழ் மொழியானது தொன்று தொட்டு இயல், இசை, நாட கம் என மூன்று பிரிவுகளையுடையதாக வழங்கி வருகின்றது. இம் மூன்றனுள் இசைத்தமிழை நடுநாயகமாக வைத்த ஒன்றே தமிழர் இசையுணர்ச்சியுடையராயிருந்தனர் என்பதற்குப் போதிய சான்ரு கும். மேலும் இயற்றமிழ் நூல்கள் பெரும்பாலும் இசை தழுவிங் பாக்களால் ஆனவை. இதலுைம் அவ்வுண்மை புலளுகின்றது. 2. இசைத் தமிழின் அடிப்படையாக விளங்கும் நூல்கள் சிலவற்றை எழுதுக. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் வரிப் பாடல்களும், தெய்வ மணங்கமழும் தேவாரதிருவாசகங்களும், தேனினும் இனிய திவ்வியப் பிரபந்தங்களும் இசைத் தமிழின் அடிப்படையாக விளங்கும் நூல்களாம். 3. இசைக் கருவிகளின் வகை எத்தனை ? அவை யாவை? விளக்குக: இசைக் கருவிகள் நான்கு வகைப்படும். அவை பாவன : தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி TTEITLIGTITEITLD. - தோலால் போர்த்த வார் கயிறு இவற்ருல் இழுத்துக் கட்டப் பட்டு முழங்குவன தோற்கருவிகளாம். பேரிகை, மத்தளம், பறை போன்றன தோற்கருவிகள் எனப்படும். நரம்புகளை இழுத்துக் கட்டி ஒலியுண்டாக்குவன நரம்புக் கருவிகள். அவை யாழ், வீணை, தம்புரா முதலியன. மூங்கில் முதலிய பொருள்களில் துளையிட்டு ஒலியுண்டாக்குவன துளைக் கருவிகள். அவை புல்லாங்குழல், நாதசுரம் முதலியன. ஒன்ருேடொன்று தட்டி ஒலியுண்டாக்குவன கஞ்சக் கருவிகள். அவை தாளம், சேகண்டி, சப்பளாக்கட்டை முதலியன. 4. தோற்கருவிகளில் சிலவற்றின் பெயர்களை எழுதுக. தோற்கருவிகளில் சிலவற்றின் பெயர்கள். பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குட முழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, முழவு, மொந்தை, சிறுபறை, துடி, பெரும்பறை முதலியன.

5. தோற்கருவிகள் சிலவற்றின் பெயர்க் காரணங்களை எழுதுக. - சிலவற்றின் பெயர்க்காரணம் : மத்தளம்-இதில் மத்து. என்பது ஒசையின் பெயர். இசைக்கு இடமாகிய கருவிகட்கெல்