பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 - பொது உரைநடை விவிைடை இனிது யாழ் இனிது எனக் குறளில் முதலில் வைத்துக் கூறப்படு கிறது. குழல் வழி நின்றது யாழே எனச் சிலம்பு கூறுகிறது. காட்டில் வளர்ந்திருந்த மூங்கில்களில் வண்டுகள் துளை செய் திருக்கும். அத்துளைகளின் வழியே காற்று விசும்ப்ோது இனிய ஓசை உண்டாவதைக் கேட்ட முன்னத் தமிழ் மக்கள் குழலே அமைத் தனர். முதன் முதலாக மூங்கிவில் செய்யப்பட்ட காரணத்தால் அதற்குப் புல்லாங்குழல் என்னும் பெயர் வந்தது. புல் மூங்கில். இதற்கு வங்கியம், கொன்ற்ைபங்குழல், முல்லைக்குழல், ஆம்பலந் தீங்குழல் எனப் பலபெயர்கள் இலக்கியங்களில் வழங்குகின்றன. 10. துளைக் கருவிகளில் அடங்கும் பிற கருவிகள் எவை? துளைக்கருவிகளில் அடங்கும் பிற கருவிகள் :-நாதசுரம், மகுடி சங்கு, எக்காளம், கொம்பு, தாரை முதலியனவாம். நாத சுரத்திற்கு நாகசுரம், நாகசின்னம், நாயனம் என்னும் பெயர்களும் உண்டு. இக்கருவி 14-ஆம் நூற்ருண்டிலிருந்தே வழங்கி வருகிறது என்பர். 11. நரம்புக் கருவிகள் எவை? அவற்றுள் மிகப் பழமை வாய்ந்தது எது? அதன் வகைகள் யாவை ? யாழ், வீன, கோட்டு வாத்தியம், கெத்து வாத்தியம், பிடில், தம்புரா முதலியன நரம்புக் கருவிகளாம். இவற்றுள் மிகப் பழமையானது யாழ் என்னும் கருவியாகும். இஃது ஆதியாழ், பேரி யாழ், மகாயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் எனப் பல வகைப்படும். ஆதியாழ் ஆயிரம் நரம்புகளை யுடையது. பேரியாழ் இருபத்தொரு நரம்புகள்ை உடையது. மகரயாழ் பத்தொன்பது நரம்புகளே உடையது. சகோடயாழ் பதிஞன்கு நரம்புகளை யுண்ட் யது. செங்கோட்டியாழுக்கு ஏழு நரம்புகள். 12. யாழின் இன்றைய நிலை என்ன ? யாழ் வகைகள் இன்று பெரிதும் வழக்கொழிந்தன. இவற்றின் இபர்களே நூல்களில் அறிகின்ருேமே தவிர அவ்ற்றின் உருவிங்கள் தெரியவில்லை. இயக்குவோரும் அருகிப் போயினர். ஆயினும் தமிழ்த்தாயின் தவப் புதல்வராகிய விபுலாநந்த அடிகள், மறைந்து போன யாழைத் தமிழகம் கண்டு களிக்கப் புதுப்பித்தருளிஞர். இக் காலத்தில் வழங்கி வரும் வீணை யாழின் திரிபு என்பர். 13. கஞ்சக் கருவிகள் யாவை ? வெண்கலத்தாற் செய்த தாளம், ஜாலரா, சேகண்டி, கினி முதலியன கஞ்சக் கருவிகளாகும். இயம் என்னும் சொல்லைப் பற்றிக் குறிப்பு வரைக. இசைக் கருவிகளே இயம் என்றே சங்க நூல்கள் இயம்புகின் றன. பல்வகை வாத்தியங்களுக்குப் பல்லியம் என்று ப்ெயர். பலவகை இசைக்கருவிகளையும் இயக்கத் தெரிந்த ஒரு புலவருக்கு நெடும் பல்லியத்தனர் என்ற பெயர் இருந்த்தாக்த் தெரிகிறது. கிண்