பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பொது உரைநடை விவிைடை விஞ்ஞானிகள் கூடிச் சில திட்டங்களை வகுத்துத் கொண்டு 1957ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியிலிருந்து 1958-ஆம் ஆண்டு இறுதி வரையுள்ள பதினெட்டு மாதங்களிலும் ஆராய்ந் தனர். 35 சூலை முதல் 1958 இறுதி வரையுள்ள பதினெட்டு மாதங்களையும் உள்ள்ட்க்கிய ஆண்டுக்குச் சர்வதேச பூபெளதிக ஆண்டு என்று பெயர். 3. பூபெளதிக ஆண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங் கள் யாவை ? இதன் முக்கிய நோக்கங்களாவன : 1. பூமியின் உள்ளமைப்பைத் திட்ட வட்டமாக அறிவது, 2. உலகின் தட்ப வெப்ப நிலையை முன் கூட்டியே அறிவதற்கான புள்ளி விவரங்கள் கணிப்ப்து, 3. காற்று மண்டலத்தில் ஏற்படும் எண் ணிறந்த மின்சார-காந்த விளைவுகளே ஆராய்ந்தறிவது Tals LIGHT FIITLI, முக்கியமாகக் காந்தப் புயல்கள் உண்டாகக் காரணமென்ன? சூரியப் புள்ளிகள் உச்ச நிலையில் இருக்கும்போது காந்தப் புயல்கள் ஏன் பெருத்த அளவில் ஏற்படுகின்றன? துருவப் பிரதேச மக்க இளப் பேர்ச்சத்தில் ஆழ்த்திவைக்கும் செவ்வான ஜோதியின் மர்ம மென்ன? என்பவைகள்ை அறிவதும், நாம் வாழும் பூமியைப் பற்றியும் பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலத்தின் விபரீதத் தோற்றங்களைப் பற்றியும் நன்கு அறிவதும் பூபெளதிக ஆண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். 4. செயற்கைச் சந்திரனை வான வெளியில் அனுப்பக் காரணம் என்ன ? காற்றுக் கவசத்திற்கு அப்பால் வெளிப் புறத்திலிருந்து சில அபூர்வக் கதிர்களும் சில மின்னணுக்களும் அடிக்கடி காற்று மண்டலத்தைத் தாக்கிக் கொண்டிருப்பதால் பல விபரீத நிகழ்ச்சி கள் நிகழ்கின்றன. சூரியனிடமிருந்து புற ஊதாக் கதிர்களும், எக்ஸ்-கதிர்களும், மின்னணுக்களும் பூமியை அடிக்கடி தாக்கிக் கொண்டிருக்கின்றன. நட்சத்திர மண்டலங்களிலிருந்து கொடிய சில கதிர்கள் கர்ற்றுக் கவசத்தினூடே பாய்ந்த வண்ணமிருக் கின்றன. இவ்வாறு காற்று மண்டலத்தைத் தாக்கும் மின்னனுக்கள். கதிர்கள் இவற்றின் இயல்புகளைத் தெரிந்துகொள்ள விஞ்ஞானக் கருவிகளைக் காற்றுக் கவசத்திற்கு அப்பால் எடுத்துச் செல்லவேண் டும். அதனுல் விஞ்ஞானக் கருவிகள் கொண்ட செயற்கைச் சந்தி ர்ன-பூமியை வட்டமிடுமாறு அமைத்துப் புள்ளி விவரங்கள் சேகரிக்க ஏற்பாடு செய்தார்கள்.