பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான் வெளிச் செலவு 199 5. செயற்கைச் சந்திரனை அனுப்புவதில் யார் எந்த நாடு வெற்றி கண்டது? செயற்கைச் சந்திரனை அனுப்புவதில் முதன் முதல் வெற்றி கண்ட நாடு ரஷிய நாடேயாகும். இவ்வெற்றிக்கு முக்கிய காரணராக இருந்தவர் பீட்டர் கபிட்சா என்ற விஞ்ஞானியாவர். 6. செயற்கைச் சந்திரன் என்ருல் என்ன ? அதனை ரவியர் எவ்வாறு அழைப்பர்? செயற்கைச் சந்திரன் என்பது ஒரே ஒரு விஞ்ஞானக் கருவி மட்டுமன்று. பல விஞ்ஞானக் கருவிகளை உள்ளடக்கிய ஒரு வியத்தகு கோளமாகும். இதனை ரஷியர்கள் ஸ்புட்னிக் என அழைக்கிருர்கள். 7. முதல் ஸ்புட்னிக் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது? ரவியாவின் முதல் ஸ்புட்னிக் இரண்டடி விட்டமுள்ள ஓர் உருண்டைக் கூண்டு. இதற்குள் வெப்ப நிலையை அளக்கும் ஒரு வெப்பமானி, காற்றின் அமுக்க நிலையைக் கணிக்கும் ஒர் அமுக்க மாணி, ஈரநிலையைப் பதிவு செய்யும் ஒர் ஈரமானி இவைகள் அமைக்கப் பட்டிருந்தன. அதனுடன் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், எக்ஸ்-கதிர்கள் மின்னணுக்கள், நட்சத் திர மண்டலங்களிருந்து வரும் காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் இவற்றைத் தனித்தனியே பதிவு செய்யும் வெவ்வேறு கருவிகள், இவைகளே இயக்கும் மின்கலங்கள் ஆகிய யாவும் பக்குவமாக அமைக்கப்பட்டிருந்தன. 8. செயற்கைச் சந்திரனில் உள்ள கருவிகள் விஞ்ஞானப் புள்ளி விவரங்களை நமக்கு எவ்வாறு அறிவிக் கின்றன ? அக்கருவிகள் விஞ்ஞானப் புள்ளி விவரங்களைப் பதிவு செய்து, அவற்றை வானுெவி அலைகளாகமாற்றி, வெளியில் நீட்டிக் கொண் டிருக்கும் ஏரியல் கம்பிகளிலிருந்து பூமியை நோக்கி வாளுெவி அலேகளாக அனுப்பும். இவைகளைப் பூமியில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களில் வாங்கிப் பதிவு செய்து கொள்வார்கள். 9. அகற்சி விசை என்ருல் என்ன? விளக்குக. ஒருவன் சைக்கிளில் வளைவான பாதையில் செல்லும்போது, தன்னையறியாமலே தனது உடலை வளைவின் உட்புறமாகச் சிறிது சாய்த்துக் கொள்கிருன். அவ்வாறு சாய்த்துக் கொள்ளாவிடில் திடீரென்று வளைவின் வெளிப்புறமாக வீசி எறியப்படுவான். எனவே வளைவான பாதையில் இயங்கும் ஒரு பொருளே, வளைவின் மையத்திலிருந்து அப்பால் வீசி எறியக் கூடிய ஒரு விசை இயல்பாக அமைந்துள்ளது. அதுவே அகற்சி விசை எனப்படும்.