பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பொது உரைநடை விவிைடை . 10. சந்திரன் நெடுவட்டமாகப் பூமியைச் சுற்றக் காரண் மென்ன? சந்திரன் பூமியைச் சுற்றும் வேகம் காரணமாக ஏற்படும் அகற்சி விசையால் சந்திரன் பூமிக்கு அப்பால் செல்ல முயலுகிறது. பூமிக்குக் கவர்ச்சி விசையிருப்பதால் அதனைப் போக விடாமல் இழுத்துக் கொள்ளுகிறது. இந்த அகற்சி விசையும் கவர்ச்சி விசையும் சமமாக அமையுமானல் சந்திரன் சுற்றிவரும் பாதை வட்டமாக இருக்கும். ஆல்ை இரண்டும் சமமாக அமைவது அரிது. ஆகவே சந்திரன் சுற்றிவரும் பாதை நெடு வட்டமாக அமைகிறது. 11. செயற்கைச் சந்திரன் எத்தனை மைல் வேகத்தில் சுற்றுகிறது? ஏன்? பூமியிலிருந்து செயற்கைச் சந்திரன் இரண்டரை இலட்சம் மைல் தூரத்தில் விலகியிருக்குமானுல் அஃது இரண்டாயிரம் மைல் வேகத்தில் சுற்றினுல் போதும். ஆனல் அது பூமியிலிருந்து 560 மைல் தூரத்தில் சுற்றுவதால் அதிக வேகத்துடன் அஃதாவது 18,000 மைல் வேகத்துடன் சுற்றுகிறது. 12. செயற்கைச் சந்திரனை வான வெளியில் எவ்வாறு இயக்கவேண்டும்? செயற்கைச் சந்திரனை வான வெளியில் எடுத்துச் சென்று அதைப் பூமிக்கு நேர்மட்டமாக இயக்கவேண்டும். செங்குத்தாக இயக்குவோமானுல், மேலே வீசி எறியப்பட்ட கல்லேப்போல, வேகம் குறைந்தவுடன் சென்ற வழியே திரும்பிப் பூமியை அடை யும். நேர்ம்ட்டமாக இயக்கிளுல்தான் அது வட்ட மாகச் சுற்றி வரமுடியும். 13. செயற்கைச் சந்திரனை உயரத்திற்கு எடுத்துச் செல் o வது எது? அதன் தத்துவம் என்ன? விளக்குக செயற்கைச் சந்திரனை உயரத்திற்கு எடுத்துச் செல்லும் வாக னம் ராக்கெட் என்பதாகும். இதில் அமைந்த தத்துவம் நியூட் டனின் மூன்ருவது விதியாகிய ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்பதேயாகும். உதாரணமாக பலூனச் சொல்லலாம். பலூனுள்ளே அடைக்கப்பட்டுள்ள அமுக்கம் நிறைந்த காற்று வாய் வழியாகப் பீறிட்டுக்கொண்டு வெளிவரு கிறது. அப்ப்ொழுது எதிர்விசையானது பலுனே மேல் நோக்கி உந்தச் செய்கிறது. இதைப் போலவே அமுக்கம் நிறைந்த காற்று ரர்க்கெட்டின் வாய் வழியாகக் கீழே வெளிப்படும்போது எதிர் விசையினுல் ராக்கெட் மேல் நோக்கிச் செல்கிறது. இது தான் ராக்கெட்டின் தத்துவம்.