பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பொது உரைநடை விளுவிடை

  • -

கொள்ள வசதி செய்துள்ளது அரசாங்கம். தொழிற்பனிைக் கூடங் கள் சிலவும் நிறுவப்பட்டுள்ளன : சென்னையில் ஒற்றவாடைச் சாலையில் நிறுவப்பட்டுள்ள பிரஸ்டுமெட்டல் தொழிற் பணிக் கூடம் இதில் முதன்மையானது. 3. சிறு தொழில் வளர மத்திய அரசு என்ன செய்கிறது? அதன் பணிகள் யாவை ? சிறு தொழில் வளம் பெருக்க மத்திய சர்க்காரின் விற்பனைக் கழகம் ஒன்று சென்னையில் இயங்குகிறது. சிறு தொழில்களின் உற்பத்திப் பொருட்கள் பெரும்பாலனவற்றை விற்க வழி செய்து கொடுப்பதும், புதுச்சிறு தொழில்கள் இயங்க, விற்பனே வட்டா ரங்கள் ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் பணிகள். 4. தொழில் துவங்குவதற்கு அடிப்படையாகச் சிந்திக்க o வேண்டியவை எவை? தொழில் துவங்குவதற்கு அடிபடையாக, அத்தொழிலால் உற்பத்தியாக்கப்படும் பொருட்களுக்கு விற்பனை இடங்கள் முக்கிய மாக வேண்டியதும், அத்தொழிலில் முன்னரே வல்லமை பெற்று இயங்கி வரும் தொழிற்சாலைகளுடன் புதுத் தொழில்களுக்கு வந்து சேரும் தொழிற் போட்டியும் இதில் மிகவும் சிந்திக்க வேண்டியன வாகும். 5. அமெரிக்காவில் சிறு தொழிற்சாலைகளின் முக்கியம் நாளுக்கு நாள் பெருகி வரக் காரணங்கள் என்ன ? அமெரிக்காவில் இதன் முக்கியம் நாளுக்கு நாள் பெருகி வருகி றது. அங்கெல்லாம் சிறு தொழிற்சாலைகளை அரசினர் நன்கு கண் கர்ணித்து, அவை பெருந் தொழிற்சாலைகளின் போட்டியில்ை நலிவுருவண்ணம் பாதுகாக்கின்றனர். இதை யொட்டி 1953-ல் ஒரு சட்டம் இயற்றியுள்ளனர். அதன்படி சிறு தொழில்களுக்கு உதவி, முன்னேற்ற வழிகள், பாதுகாப்பு முதலியன அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை நடத்திக் கொடுக்கச் சிறு கைத்தொழில் கள் ஆட்சி என்ற ஒர் இயக்கத்தினை அரசியலாரே அங்கு ஏற். படுத்தியுள்ளனர். 6. சிறு தொழில் நலிவுக்குக் காரணங்களாக அமெரிக் காவில் கண்டறிந்த உண்மைகள் யாவை? அடிப்படையாக நிர்வாகத் திறமை சிறு தொழில் நிர்வாகிக ளிடையே சரிவர இல்லாமை தான் தொழில் நலிவுக்குக் காரணம் என்று கண்டனர். பெருந் தொழிற் சாலைகளின் நிர்வாகிகளைக் காட்டிலும் இவர்களிடையே பரந்த அறிவு வேண்டும். உற்பத்தி, விற்பன், வரவு செலவு கணக்கிடுதல் இவை மூன்றனுள் ஒன்றில் வல்லம்ை குறையினும் சிறு தொழில் நலிவுறும். அமெரிக்கச் சிறு தொழில் நிர்வாகிகள், இம்மூன்று பணிகளில் ஒன்றையே சிறப்பா